ஷாருக்கான் கட்டியிருக்கும் வாட்சின் விலை எவ்வளவு தெரியுமா? வாய்பிளந்த ரசிகர்கள்!
மும்பை : பாலிவுட் ஸ்டார் ஷாருக்கான் கட்டியிருக்கும் கடிகாரத்தின் விலையை கேட்டு ரசிகர்கள் அதிர்ச்சியில் வாய் அடைத்துப்போனார்கள்.
பாலிவுட் பாட்ஷா, கிங் கான் என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுபவர் ஷாருக்கான். இவருக்கு இந்தியாவில் மட்டுமில்லாமல், உலகளவில் ஏராளமான ரசிகர்களை வைத்து இருக்கிறார்.
சினிமா ரசிகர்களின் நாடி துடிப்பை நன்றாக தெரிந்து கொண்டு ஷாருக்கான் அதற்கு ஏற்றார் போல் படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

பாலிவுட் ஸ்டார் ஷாருக்கான்
ஷாருக்கான் நடிப்பில் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் வெளியானத் திரைப்படம் பதான். இப்படத்தை ஆதித்யா சோப்ரா தயாரிக்க தீபிகா படுகோன், ஜான் ஆப்ரகாம், டிம்பிள் கபாடியா உள்ளிட்டோர் லீட் ரோலில் நடித்துள்ளனர். இப்படத்திலிருந்து 'பேஷரம் ரங்' பாடலில் தீபிகா காவி நிற பிகினி அணிந்திருந்ததால் பெரும் சர்ச்சை எழுந்தது, இந்த பாடலை நீக்க வேண்டும் என்றும், பதான் படத்தை புறக்கணிக்க வேண்டும் என்று இணையத்தில் பெரும் புயல் கிளப்பியது.

பதான் ரிலீஸ்
கடும் எதிர்ப்புக்கு இடையே பதான் திரைப்படம் ஜனவரி 25ந், இந்தி, தமிழ், மொழியில் வெளியானது. ஷாருக்கான் நடித்த ஜூரோ படம் வெளியாகி நான் ஆண்டுகளுக்கு பிறகு இப்படம் வெளியானதால், பதான் படத்தை திருவிழாப் போல ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். பதான் படம் கேஜிஎஃப் 2 படத்தின் இந்தி வசூலை முறியடித்து ரூ.832 கோடியை வசூலித்துள்ளது.

பல கோடி வசூல்
பலவிதமான சர்ச்சைக்கு மத்தியில் வெளியான பதான் படம் பல கோடி வசூலை வாரிக்குவித்து வரும் நிலையில், பதான் பட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஷாருக்கான் கையில் அணிந்து இருக்கும் கைக்கடிகாரத்தின் விலை குறித்து தகவல் வெளியாகி அவரது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது. ஊதா கலரில் அவர் அணிந்திருந்த வாட்சின் விலை மட்டும் 4.98 கோடியாகும்.

விலை உயர்ந்த கடிகாரம்
பல கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த கை கடிகாரத்தை ஷாருக்கான் சுவிட்சர்லாந்தில் உள்ள Audemars Piguet என்ற பிராண்ட் வாட்ச் நிறுவனத்திடம் இருந்து வாங்கி இருக்கிறார். கடிகாரத்தின் விலையை கேள்விப்பட்ட ரசிகர்கள் ஒரு சாதாரண சராசரி மனிதன் இந்த பணத்தை வைத்துக்கொண்டு வாழ்க்கை முழுவதையும் சந்தோஷமாக நடத்திவிடலாம் என்றும் அவ்வளவு விலை உயர்ந்த வாட்சா என்றும் ரசிகர்கள் ஏக்க பெருமூச்சு விட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











