‘ஜவான்’ அறிவித்த தேதியில் வெளியாவதில் சிக்கல்.. தள்ளிபோவதற்கு காரணம் இதுதான்!
சென்னை : அட்லீ இயக்கி வரும் ஜவான் திரைப்படம் அறிவித்த தேதியில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தமிழில் ராஜா ராணி படம் மூலமாக அறிமுகமான அட்லீ, பாலிவுட் ஸ்டார் ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கி வருகிறார். இதன் மூலமாக பாலிவுட்டில் இயக்குநராக தடம் பதிக்கிறார்.
இதில் நயன்தாரா, யோகிபாபு, விஜய்சேதுபதி என பல தமிழ் நடிகர்கள் இந்தப் படத்தில் நடிக்கின்றனர் இதில், விஜய்சேதுபதி வில்லனாக நடிக்கிறார்.

நடிகர் ஷாருக்கான்
நடிகர் ஷாருக்கான் பல ஆண்டுகளுக்கு பிறகு பதான் படத்தின் மூலம் பிளாக் பஸ்டர் ஹிட் படத்தை கொடுத்துள்ளார். இந்த வெற்றியின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களின் பார்வையும் ஜவான் படத்தின் மீது உள்ளது. அதுமட்டுமில்லாமல் ஜவான் படத்தின் டீசர் கடந்த ஆண்டு வெளியானது, அதில் ஷாருக்கான் ரத்தக்களறி உடன், முகம், கைகளில் துணியைக் கட்டிக்கொண்டு பயங்கர மிரட்டலாக இருந்தார்.

இறுதிகட்ட படப்பிடிப்பு
ஷாருக்கானின் ரெட் சில்லிஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இந்தப் படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் ஜூன் 2ம் தேதியும் வெளியாகும் படக்குழு அறிவித்துள்ளது. மும்பையில் நடந்து வரும் படப்பிடிப்பில் நடிகை நயன்தாரா கலந்து கொண்டார். இதையடுத்து, ஏப்ரல் மாத இறுதிக்குள் மொத்த படப்பிடிப்பையும் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

வெளியாவதில் சிக்கல்
ஆனால், படப்பிடிப்பு முடிந்தாலும், போஸ்ட் புரொடக்ஷன் பணிகளுக்கு நேரம் எடுக்கும் என்பதால் ஜவான் படத்தை திட்டமிட்ட தேதியில் வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும், பட ப்ரோமோஷனை அவசரப்படாமல் நிதானமாக செய்ய அட்லீ திட்டமிட்டுள்ளதால், வெளியீட்டு தேதியை மாற்றுவது குறித்து ஆலோசனைகள் நடத்தி வருவதாக பாலிவுட்டிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கேமியோ ரோலில் ஆதிரா
இப்படத்தில் சஞ்சய் தத்தை கேமியோ ரோலில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. முன்னதாக இந்த கதாபாத்திரத்திற்கு அல்லு அர்ஜுனிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில், அவர் புஷ்பா 2 படத்தில் பிஸியாக நடித்து வருவதால், இப்படத்தில் நடிக்க மறுத்துவிட்டார். இதனால், கேஜிஎஃப் படத்தில் ஆதிராவாக மிரட்டிய சஞ்சய் தத்திடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். மேலும் இப்படத்திற்கு இசையமைத்துள்ள அனிருத், இதுவரை நீங்கள் கேட்ட என்னுடைய இசைகளிலேயே 'ஜவான்' படத்தில் கேட்பீர்கள் எனக்கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











