ஜவான் ‘வந்த இடம்‘ பாடல் காபியா? தொடர் சர்ச்சையில் சிக்கும் அனிருத் பாடல்கள்!
சென்னை: ஷாருக்கான் நடிப்பில் உருவாகி உள்ள ஜவான் படத்தின் முதல் பாடலான வந்த இடம் என்ற பாடல் யுவன் சங்கர் ராஜா பாட்டுப்போல இருப்பதாக நெட்டிசன்கள் இணையத்தில் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
அட்லீ இயக்கத்தில் உருவாகியுள்ள ஜவான் படத்தின் மூலம் அனிருத் பாலிவுட்டில் இசையமைப்பாளராக அறிமுகமாகி உள்ளார்.
இந்தப் படத்தில் இருந்து வெளியான முதல் பாடலான ஜிந்தா பந்தா, வந்த எடம் மற்றும் தும்மே துளிபெலா என இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியானது. இப்படம் வெளியான 24 மணி நேரத்தில் 46 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது.

காப்பி சர்ச்சை: இன்றைய தேதியில் தென்னக அளவில் அனைவராலும் விருப்பப்படும் இசையமைப்பாளராக இருக்கிறார் அனிருத். இவர் பாடல்கள் அவ்வப்போது காப்பியடித்து சர்ச்சைகளில் சிக்குவது வாடிக்கையாகி விட்டது. இவருடைய இசையில் வெளியான டாக்டர் படத்தின் 'ஸோ பேபி' பாடல் ஒரே வாரத்தில் ஒரு கோடி பார்வையாளர்களை யூடியூபில் பெற்றுள்ளது. ஆனால் இப்பாடல் ஆங்கிலத்தில் வெளியான ஒரு புகழ் பெற்ற ஆல்பத்தின் அப்பட்டமான காப்பி என சர்ச்சை வெடித்தது. அதே போல பீஸ்ட் படத்தின் அரபிக் குத்து பாடலும் காப்பி சர்ச்சையில் சிக்கியது.
ஜவான் பாடல் காப்பியா?: தற்போது அனிருத் அதே போன்று ஒரு பாடல் காப்பி சர்ச்சையில் சிக்கி உள்ளார். ஷாருக்கான் நடித்த ஜவான் படத்தின் முதல் பாடலான 'வந்த இடம்' பாடல் வெளியாகி இணையத்தில் பட்டையை கிளப்பி வருகிறது. தமிழில் இந்த பாடலை அனிருத் பாடி உள்ளார். ஆயிரம் நடன கலைஞர்கள் இந்த பாடலில் நடனமாடி உள்ளனர்.

மாநாடு பாடலா? இந்த பாடல் இணையத்தில் டிரெண்டாகி வரும் நிலையில் இந்த பாடலைக் கேட்ட ரசிகர்கள் இந்த பாடல் சிம்பு நடித்த மாநாடு படத்தில் வரும் maanadu voice of unity bgm போல இருக்கிறது என்றும், ஜவான் படத்திலும் தனது காப்பி பேஸ்ட் வேலையை அனிருத் செய்துவிட்டார் என்றும், இரண்டு பாடலையும் ஒப்பிட்டு இணையத்தில் நெட்டிசன்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். ஏற்கனவே ஜவான் படம் பேரரசு படத்தின் காப்பி என்று கருத்து நிலவி வரும் நிலையில் பாடலும் காப்பி சர்ச்சையில் சிக்கி உள்ளது.


Click it and Unblock the Notifications











