Jawan collection: வரும்போது தெரியணும் வர சிங்கம் யாரு... பிரித்து மேயும் ஜவான் இரண்டாம் நாள் வசூல்!
சென்னை: ஷாருக்கானின் நடிப்பில் வெளியான ஜவான் திரைப்படத்தின் இரண்டாம் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
முதன்முதலில் பாலிவுட்டில் கால் பதித்துள்ள அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள படம் ஜவான். இப்படத்திர் நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோனே,யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர்.
தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் பான் இந்திய திரைப்படமாக உலகம் முழுவதும் நேற்று வெளியானது.

ஷாருக்கான் ஜவான்: ஜெயிலராக இருக்கும் ஷாருக்கான் தன்னுடைய சிறைச்சாலையில் இருக்கும் 6 பெண்களை வைத்து மக்களுக்கு எதிராக நடக்கும் தீமைகளை எதிர்த்து போராடுகிறார். இதற்காக தனது பெயரை மறைத்து 'விக்ரம் ரத்தோர்' என்ற அடையாளத்துடன் அரசாங்கத்தை எதிர்கிறார்.
கதை: ஷாருக்கான் மற்றும் 6 பெண்களும் இப்படி மாறுவதற்கு காரணமாக இருப்பவர் வில்லன் விஜய் சேதுபதி. வில்லன் விஜய் சேதுபதிக்கும் ஹீரோ ஷாருக்கானுக்கும் இடையே உள்ள பகை என்ன? மக்களுக்காக போராடிய ஷாருக்கான் வெற்றி பெற்றாரா இல்லையா என்பதுன் படத்தின் மீதி கதை.
குவியும் பாராட்டு: முதன்முறையாக கூட்டணி சேர்ந்துள்ள ஷாருக்கான் அட்லீ மற்றும் அனிருத்தின் காம்போ வெற்றி பெற்றுள்ளது. அனிருத்தின் இசை பட்டையை கிளப்பியது. தியேட்டரில் படம் பார்த்த ரசிகர்கள் வந்த இடம் யாரு பாடலுக்கும், ராமையா வஸ்தாவய்யா பாடலுக்கு எழுந்து ஆட்டம் போட்டு அலப்பறை செய்தனர்.
ரூ.129.6 கோடி வசூல்:வியாழக்கிழமை வெளியான இத்திரைப்படம் நல்லவிமர்சனத்தை பெற்று வருகிறது. படத்தை பல பிரபலங்கள் பாராட்டி வருகின்றனர். உலகம் முழுவதும் ஒரே நாளில் ரூ.129.6 கோடி வசூலித்துள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் இந்தியாவில் மட்டுமே ரூ. 75 கோடி வரை வசூல் செய்துள்ளது. முதல் நாளே உலகளவில் ரூ. 100 கோடியை கடந்துள்ளது.
இரண்டாம் நாள் வசூல்: இந்நிலையில் இரண்டாம் நாளான நேற்று ஜவான் திரைப்படம் ரூ.53 கோடியை வசூலித்துள்ளது. இதில் இந்தியில் மட்டும் ரூ47 கோடியும், தமிழில் ரூ 3.5 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்றும் நாளையும் வார விடுமுறை நாட்கள் என்பதால், ஜவான் திரைப்டபம் இந்த வாரம் இறுதிக்குள் கண்டிப்பாக பாக்ஸ் ஆபிஸில் புதிய வசூல் சாதனைகளை படைக்கும்.


Click it and Unblock the Notifications











