Jawan review: ஷாருக்கானின் ஜவான் படம் எப்படி இருக்கிறது… முதல் விமர்சனம் இதோ!

சென்னை: பாலிவுட் ஸ்டார் ஷாருக்கான் நடித்துள்ள ஜவான் திரைப்படத்தின் முதல் விமர்சனம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

பதான் திரைப்படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்த ஷாருக்கானின் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ளத் திரைப்படம் ஜவான்.

இப்படத்தின் மூலம் அட்லீ, நயன்தாரா, அனிருத் ஆகியோர் பாலிவுட்டில் தங்களது தடத்தை பதித்துள்ளனர்.

Bollywood star shah rukh khans Jawan movie first review

இயக்குநர் அட்லி: தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனரான அட்லீ, ராஜா ராணி, மெர்சல், தெறி,பிகில் என மாஸ் ஹிட் திரைப்படங்களை கொடுத்துள்ளார். தற்போது இவர் பாலிவுட் பாட்ஷா ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை தொடங்கி உள்ளார். பிகில் படத்தை தொடர்ந்து இந்த படத்தின் பேச்சுவார்த்தை தொடங்கிய நிலையில், படத்திற்கு பலவிதமான எதிர்ப்புகள் எழுந்தன.ஒரு கட்டத்தில் இந்த படம் கைவிடப்பட்டுவிட்டதாகவே செய்திகள் பரவின.

ஜவான்: பலவிதமான பிரச்சனைக்கு மத்தியில் உருவான ஜவான் திரைப்படம் இந்த வெள்ளிக்கிழமை திரையரங்கில் வெளியாக உள்ளது. நயன்தாரா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்திலிருந்து வெளியான டிரைலர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

புக்கிங் தொடங்கின: இப்படத்துக்கான புக்கிங் ஏற்கெனவே அமெரிக்கா, துபாய், ஆஸ்திரேலியா, சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளில் நடந்து வருகிறது. மும்பையில் ஒரு சில இடங்களில் இப்படத்துக்கான புக்கிங் திறக்கப்பட்ட 15 நிமிடங்களில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. எனவே ஜவான் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் அமோகமாக இருக்கும் என்றே தெரிகின்றது. டாப் நடிகர்களின் படங்களின் வசூலை மிஞ்சும் அளவுக்கு ஜவான் கோலிவுட் சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காட்சிக்கு காட்சி த்ரில்: இந்நிலையில் ஜவான் படத்தைப் பார்த்த ஒருவர் முதல் விமர்சனத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், படம் முழுவதும் அதிரடியான ஆக்ஷன், காமெடி, த்ரில் என அனைத்தும் கலந்து கலவையாக உள்ளது. காட்சிக்கு காட்சி சீட்டின் நுனியில் உட்கார்த்து படம் பார்க்கும் அளவிற்கு அட்லீ ஜவான் படத்தை இயக்கியுள்ளார் என முதல் விமர்சனம் வந்துள்ளது. இணையத்தில் வெளியாகி இருக்கும் இந்த தகவலைப் பார்த்த பேன்ஸ் ஜவான் படம் நிச்சயம் சூப்பர் ஹிட் அடிக்கும் என கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X