பணத்திற்கு பஞ்சமே இல்ல.. வெளிநாட்டில் ஆடம்பரமாக செலவு செய்யும்.. ஷாருக்கானின் மகள்!
மும்பை: பாலிவுட் ஸ்டார் ஷாருக்கானின் மகள் சுஹானா கானை தனது அடுத்த படமான கிங் படத்தில் நடிக்க இருப்பதாக பாலிவுட் பேச்சுக்கள் அடிப்பட்டு வரும் நிலையில்,சுஹானா கான் இன்ஸ்டாகிராமில் விதவிதமான போட்டோக்களை ஷேர் செய்து லைக்குகளை குவித்து வருகிறார்
பாலிவுட் பாட்ஷா, கிங் கான் என ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் ஷாருக்கான். இவருக்கு இந்தியாவில் மட்டுமில்லாமல், உலகளவில் ஏராளமான ரசிகர்களை வைத்து இருக்கிறார். சினிமா ரசிகர்களின் நாடி துடிப்பை நன்றாக தெரிந்து கொண்டு ஷாருக்கான் அதற்கு தகுந்தார் போல, மாஸ் திரைப்படத்தை தேர்வு நடித்து வருகிறார்.

பாலிவுட் கிங்: ஷாருக்கான் நடிப்பில் கடந்த ஆண்டு பதான் படம் வெளியாகி, மகத்தான வசூலை அள்ளியது. இந்த படத்தில் இந்திய ரா பிரிவின் ரகசிய உளவாளியாக நடித்திருந்தார். பதான் திரைப்படத்தை தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் ஜவான் படத்தில் நடித்தார். அந்த படமும் ஆயிரம் கோடி வசூலை அள்ளி சாதனை படைத்தது. ஷாருக்கான் அடுத்ததாக கிங் என்ற படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை, திரைப்படத் தயாரிப்பாளரான சுஜோய் கோஷால் இயக்க உள்ள நிலையில் ஷாருக்கானின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட் இந்த படத்தை தயாரிக்க உள்ளது.

இந்த படத்தில் ஷாருக்கானின் செல்ல மகள் சுஹானா கான் ஒரு முக்கியமான ரோலில் நடிக்க இருப்பதாகவும், மகள் அறிமுகமாகும் படம் என்பதால், இந்த படத்திற்காக கோடி கணக்கான பணத்தை செலவு செய்து ஒரு நல்ல வலுவான கதாபாத்திரத்தில் மகளை நடிக்க வைக்க திட்டம்போட்டுள்ளார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை என்றாலும், சுஹானா இந்த படத்தில் நடிப்பது கன்பார்ம் என்பது போல பாலிவுட் வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வருகின்றன.

இத்தாலிக்கு ஜாலி ட்ரிப்: இன்ஸ்கிராமில் ஐந்து புள்ளி ஒரு மில்லியன் பாலோவர்களை வைத்து இருக்கும் சுஹானா கான் அப்போது தனது போட்டோக்களை இணையத்தில் அப்லோடு செய்து வருகிறார். தற்போது இத்தாலிக்கு சுற்றுலா சென்றுள்ள இவர், அங்கு எடுத்த போட்டோவை ஷேர் செய்துள்ளார். அந்த போட்டோவிற்கு லைக்குள் குவிந்து வரும் நிலையில், சில நெட்டிசன்ஸ் உங்களுக்கு என்னப்பா பணத்திற்கு பஞ்சமா என கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
நெகிழ்ச்சி பேச்சு: குடும்பத்தின் மீது அதிக பாசம் கொண்ட ஷாருக்கான் தனது மகளுக்காக நிச்சயம் பணத்தை தண்ணியாக செலவு செய்ய தயங்கமாட்டார் என்று சொல்லப்படுகிறது. அண்மையில் ஜவான் திரைப்படததிற்கு ஜீ சினி விருது கொடுத்த போது நிகழ்ச்சியில் பேசிய ஷாருக்கான், இந்த விருதை, எனது குழந்தைகளான ஆர்யன் கான், சுஹானா கான், அப்ராம் கான் மற்றும் மனைவிக்கு அர்ப்பணிக்கிறேன், அவர்களால் தான் இது சாத்தியம் என்று பேசி அனைவரையும் நெகிழ்ச்சி அடையச் செய்தார். இந்த வீடியோ மிகப்பெரிய அளவில் டிரெண்டானது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











