Thalapathy 68: தளபதி 68ல் இணையும் பாலிவுட் ஸ்டார்ஸ்.. லிஸ்டில் அமீர்கான்.. ஷாருக்கான்!
சென்னை: நடிகர் விஜய்யின் லியோ படம் அடுத்த மாதம் 19ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது.
விஜய்யின் வாரிசு படம் குடும்ப சென்டிமெண்டை மையமாக கொண்டு வெளியான நிலையில், அடுத்ததாக கேங்ஸ்டர் கதைக்களத்தில் லியோ படம் உருவாகியுள்ளது.
இந்தப்படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் தனது தளபதி 68 படத்தில் இணையவுள்ளார்.

விஜய்யின் தளபதி 68 படத்தில் இணையும் பாலிவுட் பிரபலங்கள்?: நடிகர் விஜய்யின் லியோ படம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ளது. இந்தப் படம் அடுத்த மாதம் 19ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த ஜனவரியில் வெளியான விஜய்யின் வாரிசு படம் குடும்ப சென்டிமெண்டை மையமாக வைத்து வெளியான நிலையில், லியோ படம் அழுத்தமான கதைக்களத்துடன் உருவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
லியோ படத்தில் பார்த்திபன் மற்றும் லியோ என விஜய் இரண்டு கெட்டப்புகளில் நடித்துள்ள நிலையில், படம் கேங்க்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மாஸ்டர் படம் போல இல்லாமல் இந்தப் படம் 100 சதவிகிதம் தனது ஸ்டைலில் இருக்கும் என லோகேஷ் கனகராஜ் முன்னதாக தன்னுடைய பேட்டியொன்றில் கூறியிருந்தார். அதனால் லியோ படத்தில் அவர் விஜய்யை எப்படி வெளிப்படுத்தியிருப்பார் என காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
படத்தில் த்ரிஷா, கௌதம் மேனன், மிஷ்கின், சஞ்சய் தத், அர்ஜூன் என நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. இந்நிலையில் விஜய், அர்ஜூன், சஞ்சய் தத் என அடுத்தடுத்த படத்தின் நடிகர்களின் பிறந்தநாட்களை கொண்டாடும்வகையில் படத்தின் போஸ்டர்கள், பர்ஸ்ட் சிங்கிள், கேரக்டர் கிளிம்ப்ஸ் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. குறிப்பாக படத்தின் பாடலும், அர்ஜூன் கிளிம்ப்ஸ் வீடியோவும் ஏகப்பட்ட வரவேற்பை பெற்றுள்ளது.

படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். அவரது இசையில் முதல் பாடல் கடந்த சில வாரங்களுக்கு முன்பு விஜய் பிறந்தநாளையொட்டி வெளியான நிலையில், அடுத்த வாரத்தில் படத்தில் இரண்டாவது சிங்கிள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என அனிருத் தெரிவித்துள்ளார். முதல் பாடல் விஜய்யின் அறிமுகமாக பாடலாக கவனம் ஈர்த்த நிலையில், அடுத்ததாக வெளியாகவுள்ள இந்தப் பாடல் எப்படி இருக்கும் என ரசிகர்கள் தற்போதே யோசிக்கத் துவங்கிவிட்டனர்.
இந்தப் படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்தில் கமிட்டாகியுள்ளார் விஜய். இந்தப் படத்தின் சூட்டிங் அடுத்த மாதத்தில் லியோ படத்தின் ரிலீசை தொடர்ந்து துவங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்தின் நடிகர், நடிகைகள் குறித்த அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியானவண்ணம் உள்ளது. படம் பான் இந்தியா படமாக உருவாகவுள்ள நிலையில், இந்திய அளவில் இந்தப் படத்தில் நடிகர்களை இணைக்க வெங்கட் பிரபு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
படத்தில் பிரபல நடிகர்கள் பிரஷாந்த், பிரபுதேவா, ஜெய் உள்ளிட்டவர்கள் இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில், பாலிவுட்டிலிருந்து அமீர்கான் இந்தப் படத்தில் இணைய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகின்றன. பவர்புல்லான இந்த கேமியோ கேரக்டருக்காக ஷாருக்கானிடமும் பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்தில் பிரஷாந்த் இணைவது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது. இதை அவரது தந்தை தியாகராஜனும் உறுதி செய்துள்ளார்.
படத்தில் அப்பா கேரக்டரின் ஜோடியாக ஜோதிகாவும் மகன் கேரக்டரின் ஜோடியாக பிரியங்கா மோகனும் கமிட்டாகியுள்ளதாக கூறப்பட்ட நிலையில், தற்போது ஜோதிகா அந்த கேரக்டரில் நடிக்க மறுப்பு தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக சிம்ரன் அல்லது சினேகா நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்தில் அதிகமான நடிகர்களை வைத்து வெங்கட் பிரபுவின் ஆட்டம் ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், விரைவில் நடிகர்கள் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் எதிர்பார்க்கப்படுகின்றன.


Click it and Unblock the Notifications











