»   »  ஐபிஎல் தொடக்கவிழாவில் சினிமா நட்சத்திரங்களின் அசத்தல் டான்ஸ்!

ஐபிஎல் தொடக்கவிழாவில் சினிமா நட்சத்திரங்களின் அசத்தல் டான்ஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
15 நிமிடங்கள் நடனமாட ரன்வீர் சிங்கிற்கு ரூ. 5 கோடி!- வீடியோ

மும்பை : கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் விரைவில் தொடங்கவிருக்கின்றன. ஐபிஎல் தொடக்க நிகழ்ச்சியில் திரை நட்சத்திரங்கள் பலரும் பங்கேற்கவுள்ளனர்.

இன்றைய இளைஞர்களுக்கு பிடித்தது சினிமாவும், விளையாட்டும்தான். அதிலும் கிரிக்கெட் என்றால் சாப்பாடு தண்ணீர்கூட இல்லாமல் டி.வி-யில் பார்த்து ரசிப்பார்கள். அதிலும் தமிழ்நாட்டில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள்.

Bollywood stars in IPL opening ceremony

இரண்டு ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு சி.எஸ்.கே அணி மீண்டும் இந்த ஐபிஎல் தொடரில் விளையாட இருக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் வந்திருப்பதைத் தொடர்ந்து ஆன்ந்தம், ப்ரொமோ பாடல்கள் என ரசிகர்கள் கலக்கிக்கொண்டிருக்கிறார்கள்.

இதனால் எல்லா அணிகளின் ரசிகர்களும் ஆவலோடு ஏப்ரல் 7-ம் தேதிக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். போட்டி தொடங்கும் நாளான ஏப்ரல் 7-ம் தேதி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் கலை நிகழ்ச்சிகள் நடக்க இருக்கிறது.

இந்நிகழ்ச்சியில் பாலிவுட் சினிமா நட்சத்திரங்கள் ரன்வீர் சிங், வருண் தவான், பிரியங்கா சோப்ரா, ஜாக்குலின் உட்பட பலர் கலந்து கொண்டு நடனமாட உள்ளனர். இந்த நடன நிகழ்ச்சி 45 நிமிடங்கள் நடக்கவுள்ளது எனக் கூறப்பட்டுள்ளது.

English summary
Cricket fans will be eagerly looking forward to the IPL Cricket tournament soon. Bollywood cinema stars Ranveer Singh, Varun Dhawan, Priyanka Chopra and Jacqueline are to attend the opening ceremony in Mumbai on April 7.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X