அய்யப்பனும் கோஷியும் இந்தி ரீமேக்..அபிஷேக் பச்சன் தான் ஹீரோ !
மும்பை: மலையாளத்தில் ஹிட்டடித்த அய்யப்பனும் கோஷியும் இந்தியில் உருவாகி வருகிறது. இதில் ஜான் ஆப்ரஹாமும் அபிஷேக் பச்சனும் நடிக்க உள்ளனர்.
முன்னாள் ராணுவ அதிகாரிக்கும், போலீசாருக்கும் இடையேயான ஈகோவை மையமாக வைத்து இந்த திரைப்படம் உருவாகி உள்ளது.
சச்சி இயக்கத்தில் உருவான இந்தப்படத்தில் பிரித்விராஜ் முன்னாள் ராணுவ அதிகாரியாக நடித்து இருப்பார். இப்படம் கேரளாவில் நல்ல வரவேற்பை பெற்றது

மகாஹிட்
மலையாளத்தில் பிரித்விராஜ், பிஜு மேனன், அன்னா ராஜன் உள்ளிட்ட பலர் நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் அய்யப்பனும் கோஷியும். இத்திரைப்படம் அமேசான் பிரைமில் வெளியாகி தமிழ்நாட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இத்திரைப்படம் தமிழ்,தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ரீமேக் ஆக உள்ளது.

யார் என்பது தெரியவில்லை
இந்த திரைப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை ஜிகர்தண்டா படத்தின் தயாரிப்பாளர் கதிரேசன் வாங்கியுள்ளார். இவர் ஆடுகளம், பொல்லாதவன் படங்களை தயாரித்தவர் ஆவார். மலையாளத்தில் ஹிட் அடித்த படம் என்பதால் தமிழிலும் நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப்படத்தின் தமிழ் ரீமேக்கில் யார் நடிக்க போகிறார்கள் என்பது பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

பாலகிருஷ்ணா, ராணா டகுபதி
தெலுங்கு ரீமேக்கிற்கான உரிமையை, தயாரிப்பாளர் சூர்யதேவர நாகவம்சி வாங்கியுள்ளார். இவர் அலா வைகுண்டபுரம்லு படங்களை தயாரித்தவர். இந்தப் படத்தில் மலையாளத்தில் பீஜூமேனன் நடித்த பாத்திரத்திற்கு பாலகிருஷ்ணாவையும், பிருத்விராஜ் நடித்த பாத்திரத்திற்கு ராணா டகுபதியையும் நடிக்க வைக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

ஜான் ஆப்ரஹாம், அபிஷேக் பச்சன்
இந்தியில் ரீமேக் ஆக உள்ள இப்படத்தில் ஜான் ஆப்ரஹாம் மற்றும் அபிஷேக் பச்சன் ஆகியோர் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இவர்கள் இருவரும் இதற்கு முன் தோஸ்தானா படத்தில் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











