»   »  வாய்ப்பு பெற, அடுத்தவர்களை நாசம் செய்ய பில்லி சூனியம் செய்வினை செய்யும் நடிகர், நடிகைகள்

வாய்ப்பு பெற, அடுத்தவர்களை நாசம் செய்ய பில்லி சூனியம் செய்வினை செய்யும் நடிகர், நடிகைகள்

Posted By:
Subscribe to Oneindia Tamil
பட வாய்ப்புகளை பெற பாலிவுட் பிரபலங்கள் செய்யும் பில்லி சூனியம் செய்வினை

மும்பை: பட வாய்ப்புகளை பெற, அடுத்தவர்கள் வாய்ப்பை தட்டிப் பறிக்க பாலிவுட் பிரபலங்கள் பில்லி சூனியம் செய்வினை செய்வது தெரிய வந்துள்ளது.

பட வாய்ப்புகளை பெற திரையுலக பிரபலங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுவது உண்மையே. ஆனால் பாலிவுட்காரர்கள் பட வாய்ப்புகளை பெற, அடுத்தவர்களின் வாய்ப்பை கெடுக்க பில்லி சூனியம் செய்வினை செய்கிறார்களாம்.

நடிகர் ரன்பிர் கபூர், நடிகை கத்ரீனா கைஃப் வாழ்க்கையிலும் விளையாடியுள்ளனர்.

கத்ரீனா கைஃப்

கத்ரீனா கைஃப்

தீபிகா படுகோனேவை காதலித்துக் கொண்டிருந்த ரன்பிர் கத்ரீனா மீது காதல் கொண்டார். இதையடுத்து தீபிகாவை பிரிந்து கத்ரீனாவுடன் சேர்ந்து வீடு எடுத்தார்.

சுத்தம்

சுத்தம்

புது வீட்டில் ஏதோ சரியில்லை என்பதை உணர்ந்த ரன்பிர், கத்ரீனா மந்திரவாதியை அழைத்து சில பூஜைகள் செய்துள்ளனர். பொறாமை பிடித்த நண்பர் ஒருவர் தான் அவர்களின் வீடு மற்றும் அவர்களுக்கு எதிராக ஏதோ ஏவல் வைத்ததாகவும், அதனால் தான் அவர்களுக்கு பிரச்சனையாக உள்ளது என்றும் அந்த மந்திரவாதி தெரிவித்துள்ளார்.

செய்வினை

செய்வினை

திரையுலக பிரபலங்கள் சக கலைஞர்களுக்கு செய்வினை செய்வது, ஏவல் பில்லி சூனியம் செய்வது என்று ரகசிய வேலைகளில் ஈடுபட்டு எதிரிகளை அழிக்க முயற்சி செய்கிறார்கள்.

செம லாபம்

செம லாபம்

பாலிவுட் பிரபலங்கள் இப்படி பில்லி சூனியம் செய்வினையை நம்புவதால் மும்பையில் வசிக்கும் மந்திரவாதிகளுக்கு வியாபாரம் படுஜோராக நடக்கிறதாம்.

பொம்மை

பொம்மை

ஒரு நடிகை மந்திரவாதியை அணுகி வூடூ பொம்மையில் எத்தனை ஊசி குத்தினால் எதிரிக்கு நன்றாக வலிக்கும் என்று கேட்டுள்ளார். அந்த நடிகையின் பெயரை தெரிவிக்க மந்திரவாதி மறுத்துவிட்டார்.

அதிர்ச்சி

அதிர்ச்சி

அண்மையில் திருமணமான முன்னாள் பாலிவுட் நடிகையின் படுக்கையறைக்கு சென்ற இயக்குனர் ஒருவர் அதிர்ச்சி அடைநதுள்ளார். அவர் நடிக்க வந்ததில் இருந்து பில்லி சூனியத்தை தான் நம்பியிருந்திருக்கிறார் என்பது அவரின் அறையில் இருந்த பொருட்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

நாசம்

நாசம்

அந்த நடிகையின் படுக்கையறையில் இறகுகள், எலும்புகள், கண்ணாடி பொருட்கள் இருந்துள்ளது. அறை வெளிச்சமே இல்லாமல் இருட்டாக இருந்துள்ளது. அந்த நடிகை தனது காதலரான நடிகரின் கெரியரை நாசம் செய்ய பில்லி சூனியத்தை நாடியுள்ளார்.

English summary
A leading daily has exposed Bollywood's obsession with the black art commonly known as Black Magic. Bollywood stars use black magic to make their films hit and to curse their competitors.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil