விஜய் இல்லைனா என்ன.. பாலிவுட் சூப்பர் ஸ்டார் படத்தை ஓகே செய்த ஏ.ஆர்.முருகதாஸ்.. இதுதான் கம்பேக்!

By yogeshwaran moorthi

மும்பை : இயக்குநர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் பாலிவுட் சூப்பர்ஸ்டார் சல்மான் கான் நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தீனா, ரமணா, கஜினி உள்ளிட்ட படங்கள் மூலமாக தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் ஏ.ஆர்.முருகதாஸ். அதன்பின் தெலுங்கு சினிமாவில் சிரஞ்சீவி நடிப்பில் வெளியான ஸ்டாலின் திரைப்படத்தை இயக்கினார். அதன்பின் திடீரென பாலிவுட்டின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான அமீர் கான் ஏ.ஆர்.முருகதாஸை அழைத்தார்.

Bollywood Superstar Salman khan to act in director AR Murugadoss which is to be released on 2025 eid

கஜினி படத்தை இந்தியில் ரீமேக் செய்ய, அது இந்திய சினிமாவில் முதல்முறையாக ரூ.100 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. இதன் மூலம் இந்திய சினிமாவில் முக்கியமான இயக்குநராக மாறினார் ஏ.ஆர்.முருகதாஸ். அதன்பின் மீண்டும் தமிழுக்கு வந்த ஏ.ஆர்.முருகதாஸ், சூர்யா நடிப்பில் வெளியான 7ஆம் அறிவு படத்தை இயக்கினார். அது மிகப்பெரிய வசூலை செய்த நிலையில், விஜய் நடிப்பில் துப்பாக்கி படத்தை வைத்து உச்சத்திற்கு சென்றார்.

விஜயுடன் ஏற்பட்ட நட்பு காரணமாக பின்னர் கத்தி, சர்கார் படங்களை இயக்கினார். இதனிடையே பாலிவுட்டில் சோனாக்‌ஷி சின்ஹாவை வைத்து "அகிரா" படத்தையும் இயக்கி இருந்தார். தொடர்ந்து ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான தர்பார் திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. இதனிடையே மீண்டும் விஜய் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியது.

ஆனால் சம்பள விவகாரம் காரணமாக அந்த படத்தின் வாய்ப்பு பறிபோனது. இதன்பின் பெரிய ஹீரோக்கள் பலருக்கும் ஏ.ஆர்.முருகதாஸ் கதை கூறிய போதும், எதுவும் க்ளிக் ஆகவில்லை. இந்த நிலையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்த படத்தை எடுத்து வருகிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயான், ருக்மினி வசந்த் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

ஆக்‌ஷன் படமாக உருவாகி வரும் இந்த படத்திற்காக ஏ.ஆர்.முருகதாஸ் நீண்ட நாட்களாக திரைக்கதை அமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வந்தார். இதன் மூலமாக ஏ.ஆர்.முருகதாஸ் கம்பேக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சிவகார்த்திகேயன் படம் வெளியாவதற்கு முன்பாகவே ஏ.ஆர்.முருகதாஸ் கம்பேக்கை கொடுத்துள்ளார்.

பாலிவுட் சூப்பர்ஸ்டார் சல்மான் கான் நடிக்கவுள்ள படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சாஜித் நடியத்வாலா தயாரிக்கவுள்ள இந்த திரைப்படம் 2025ஆம் ஆண்டு ரமலானுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அஜித்குமார் நடித்த பில்லா, ஆரம்பம் படத்தை இயக்கிய விஷ்ணு வர்தன் இயக்கத்தில் தி புல் படத்தில் சல்மான் கான் நடிக்கவுள்ளார். தற்போது மீண்டும் தமிழ் இயக்குநர் படத்திற்கு சல்மான் கான் ஓகே கூறியுள்ளது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X