பாலிவுட் ஸ்டார் ஷாருக்கான் மருத்துவமனையில் அனுமதி… கவலையில் ரசிகர்கள்!
சென்னை: பாலிவுட் நடிகர் ஷாருக்கான் அகமதாபாத்தில் உள்ள கேடி மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார். நடிகர் ஷாருக்கான் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது அவரது ரசிகர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஷாருக்கானின் உடல்நிலை குறித்த அறிவிப்புகளை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
2024ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் இடையே ஆன பிளே ஆஃப் சுற்றின் முதல் தகுதிப் போட்டி அகமதாபாத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் துவக்கம் முதலே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆதிக்கம் செலுத்தியது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் சிறப்பாக விளையாடி பைனலுக்கு நுழைந்துள்ளது

திடீர் உடல்நலக்குறைவு: இந்த போட்டியை பார்த்து தனது அணி வீரர்களை உற்சாகப் படுத்துவதற்காக, ஷாருக்கான் மற்றும் அவரது குழந்தைகள் - அப்ராம், சுஹானா, அனன்யா மற்றும் ஷனாயா ஆகியோர் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இருந்தனர். அப்போது ஷாருக்கானுக்கு ஹீட் ஸ்ட்ரோக் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அகமதாபாத்தில் உள்ள கேடி மருத்துவமனையில் ஷாருக்கான் அனுமதிக்கப்பட்டார்.
கவலையில் ரசிகர்கள்: நடிகர் ஷாருக்கான் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது அவரது ரசிகர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஷாருக்கானின் உடல்நிலை குறித்த அறிவிப்புகளை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். மேலும், அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று அவரின் தீவிர ரசிகர்கள் இணையத்தில் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
ஷாருக்கானின் கிங்: மாஸ் நடிகரான ஷாருக்கான் கடந்த ஆண்டு மட்டும் "பதான்," "ஜவான்," மற்றும் "டன்கி." என மூன்று பிளாக் பஸ்டர் ஹிட் திரைப்படத்தை கொடுத்துள்ளார். இதில் அட்லி இயக்கத்தில் வெளியான ஜவான் ஆயிரம் கோடியை வசூலித்து ஒட்டுமொத்த சினிமாவையும் அதிரவைத்தது. தற்போது ஷாருக்கான், கிங் என்ற படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை, திரைப்படத் தயாரிப்பாளரான சுஜோய் கோஷால் இயக்க உள்ள நிலையில் ஷாருக்கானின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட் இந்த படத்தை தயாரிக்க உள்ளது. போர், பதான், ஃபைட்டர் போன்ற வெற்றிப்படங்களை கொடுத்த சித்தார்த் ஆனந்துடன் இந்த படத்தில் இணைந்துள்ளார். அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக உருவாகி உள்ள இந்த படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











