Shah Rukh Khan: 35 ஆண்டு கனவு.. ஷாருக்கானுக்கு தேசிய விருதை வாங்கிக் கொடுத்த அட்லீ!

டெல்லி: பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு 2023 ஆம் ஆண்டு வெளியான ஜவான் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக இருக்கும் ஷாருக்கானுக்கு கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்கு பின் இந்த விருது கிடைத்துள்ளது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

பாலிவுட் பாட்ஷா, கிங் கான் என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுபவர் ஷாருக்கான். இவருக்கு இந்தியாவில் மட்டுமில்லாமல், உலகளவில் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். தன்னுடைய ரசிகர்களுக்கு எது பிடிக்குமோ அதற்கேற்ப நடித்து தன்னுடைய ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். 'தீவானா' திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான ஷாருக்கான். முதல் படத்திலேயே நல்ல நடிப்பை வெளிப்படுத்தி அறிமுக நடிகருக்கான பிலிம் ஃபேர் விருதை வென்றார். அதன் பின் பல படத்தில் நடித்து வந்த இவர், 'தில்வாலே துல்ஹானியா லே ஜாயேங்கே' படம் ஷாருக்கானில் வாழ்க்கையில் திருப்பு முனையை ஏற்படுத்திய படமாகும். இந்த படத்தில் ஷாருக்கானுடன் காஜோல் ஜோடி போட்டு நடித்திருந்தார். இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு இருவரும் பல படத்தில் இணைந்து நடித்து இருந்தனர்.

அண்மையில் ஷாருக்கான் நடிப்பில் பதான் படம் வெளியாகி நல்ல வசூலை அள்ளியது. அந்த படத்தை தொடர்ந்து, தமிழில் பல வெற்றிப்படத்தை கொடுத்த அட்லீ பாலிவுட்டில் கால் அடி எடுத்து வைத்து ஜவான் படத்தை இயக்கினார். இந்த படத்தல் ஷாருக்கான் அப்பா, மகன் என இரண்டு ரோலில் நடித்திருந்தார். மேலும், இதில், நயன்தாரா, தீபிகா படுகோனே, சன்யா மல்கோத்ரா, விஜய்சேதுபதி, பிரியாமணி, சஞ்சய் தத் ஆகியோர் நடித்திருந்தனர். ஜவான் திரைப்படம்,இந்தி சினிமாவில் அதிக வசூல் சாதனை படைத்த படம் என இந்திய சினிமாவில் நம்பர் 1 இடத்தை பிடித்தது.

National Award Shah Rukh Khan jawan
Photo Credit:

ஷாருக்கான்: ஜவான் திரைப்படத்தின் மகிழ்ச்சியால் மகிழ்ச்சியில் இருந்த ஷாருக்கான் வெற்றி விழாவில் செய்தியாளர்களிடம் பேசினார். அதில், பல வருடங்களாக ஒரு படத்துடன் வாழ எனக்கு வாய்ப்பு கிடைத்தது, கோவிட் மற்றும் கால் ஷூட் பிரச்சனை காரணமாக ஜவான் படத்தின் தயாரிப்பு நான்கு ஆண்டுகளாக நடந்தது. இந்த படத்தில் பலர் ஈடுபட்டனர். குறிப்பாக தென்னிந்திய மக்கள் மும்பைக்கு வந்து குடியேறி கடந்த நான்கு ஆண்டுகளாக மும்பையில் வசித்தனர். இரவும் பகலாக உழைத்தோமை. இதுவரை இல்லாத கடினமாக இந்த படத்திற்கு உழைத்தோம் என்றார்.

35 ஆண்டு கனவு: அந்த கடின உழைப்பின் பலனாக ஜவான் படத்தில் சிறப்பாக நடித்ததற்கு முதன் முறையாக ஷாருக்கான் தேசிய விருதை வென்றுள்ளார். 1992ஆம் ஆண்டு தனது பயணத்தை தொடங்கிய ஷாருக்கானுக்கு 35 வருடத்திற்கு பிறகு முதன்முறையாக தற்போது விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ஷாருக்கானின் ரசிகர்கள் அவருக்கு இணையத்தில் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர். முதல் தேசிய விருதை ஷாருக்கானு பெற்று தந்த அட்லீக்கு இணையத்தில் ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். ஜவான் திரைப்படம் வெளியான ஒரு மாதத்திற்குப் பிறகு '12 ஃபெயில்' வெளியானது. நல்ல வசூலை அள்ளி அந்த படத்தில் நல்ல நடிப்பை வெளிப்படுத்திய விக்ராத் மேஸ்ஸிக்கும் சிறந்த நடிகருக்கான விருது அறிவிக்கப்பட்டது. அனுராக் பதக்கின் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்ட '12வது ஃபெயில்' திரைப்படம் எடுக்கப்பட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X