நயன்தாராவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ஷாருக்கான்.. முத்தம் கொடுத்து வழியனுப்பிய நயன்தாரா!
சென்னை : பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான் நேற்றிரவு நயன்தாரா வீட்டுக்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்துள்ளார்.
ஷாருக்கான் நடிப்பில் கடந்த மாதம் பதான் திரைப்படம் வெளியானது. நான்கு ஆண்டுகளாக ஷாருக்கானின் படம் எதுவும் வெளியாகாததால், பதான் திரைப்படத்தை காண தியேட்டரில் கூட்டம் அலை மோதியது.
பதான் படத்தின் பாடல் வெளியான போதே, பெரும் சர்ச்சையில் சிக்கிய இத்திரைப்படம், பாக்ஸ் ஆபிசில் நன்றாக கல்லாக்கட்டி வருகிறது.

நடிகர் ஷாருக்கான்
நடிகர் ஷாருக்கான் பதான் படத்தைத் தொடர்ந்து, அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் ஜவான் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்காக மும்பை சென்ற அட்லீ, மூன்று ஆண்டுகளுக்கு மேல் அங்கே வசித்து வருகிறார். ஜவானில் கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார். முக்கியக் கதாபாத்திரத்தில் தீபிகா படுகோனே நடிக்கிறார். மேலும் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் டீசர் கடந்த ஆண்டு வெளியாகி டிராண்டாகி படத்தின் மீதான ஆவலை தூண்டி உள்ளது. இப்படம் அடுத்த ஆண்டு ஜூன் 2ந் தேதி வெளியாகவுள்ளது

சர்ப்ரைஸ் விசிட்
இந்நிலையில், மும்பையில் இருந்து நேற்றிரவு சென்னை வந்த ஷாருக்கான், நடிகை நயன்தாராவின் வீட்டுக்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்தார். நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தம்பதிகளுக்கு கடந்த அக்டோபர் மாதம் இரட்டை குழந்தை பிறந்த நிலையில், அந்த குழந்தைகளை பார்ப்பதற்காக சென்னையில் உள்ள நயன்தாராவின் வீட்டுக்கு வந்துள்ளார்.

முத்தம் கொடுத்து வழியனுப்பினார்
ஷாருக்கான் வந்த செய்தி காட்டுத் தீ போல பரவியதை அடுத்து,ரசிகர்கள் நயன்தாரா வீட்டுக்கு படையெடுத்து வந்து வாசலில் காத்திருந்தனர். குழந்தைகளை பார்த்துவிட்டு வெளியே வந்த ஷாருக்கான் அங்கு திரண்டு இருந்த ரசிகர்களைப் பார்த்து கை அசைத்தார். ஷாருக்கானை வழியனுப்ப வந்த நயன்தாரா அவர் காரில் ஏறும்வரை காத்திருந்து அவருக்கு முத்தம் கொடுத்து வழியனுப்பினார். இந்த வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
அட்லீயின் குழந்தையை பார்த்தார்
கடந்த மாதம் ஜனவரி 31ந் தேதி இயக்குநர் அட்லீக்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில், அட்லீயின் வீட்டுக்கு சென்று குழந்தையை நேரில் சென்று பார்த்தார். இதையடுத்து, ஷாருக்கான் தனது ட்விட்டர் பக்கத்தில், அட்லீயின் குழந்தையைப் பார்த்தேன் குழந்தை அழகாகவும், நல்ல ஆரோக்கியத்துடனும் இருக்கிறது என்று கூறியிருந்தார்.


Click it and Unblock the Notifications











