யோகிபாபுவுக்கு நன்றி சொன்ன பாலிவுட் சூப்பர்ஸ்டார்!
சென்னை : வடிவேலு, சந்தானம் உள்ளிட்டவர்கள் ஹீரோவாக நடிக்கத் துவங்கிவிட்டதால் தற்போது தமிழ் சினிமா காமெடியன்களில் முன்னணி இடத்தில் இருப்பவர் யோகிபாபு.
அவர் பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாருக்கான் பிறந்தநாள் அன்று ட்விட்டரில் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருந்தார். ஷாருக்குடன் அவர் இணைந்து நடித்த சென்னை எக்ஸ்பிரஸ் படத்தின் ஷூட்டிங்கின் போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தையும் அவர் பதிவிட்டிருந்தார்.

காமெடியன் யோகிபாபுவின் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்துள்ள ஷாருக்கான் "that was a fun film" எனவும் குறிப்பிட்டுள்ளார். தன்னுடன் சிறிய வேடத்தில் நடித்த காமெடியனாக இருந்தாலும் நன்றி தெரிவித்துள்ள ஷாருக்கானை அவரது ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள்.
ஷாருக்கான் தனக்கு நன்றி தெரிவித்ததில் நடிகர் யோகிபாபுவும் நிச்சயமாக நெகிழ்ந்து போயிருப்பார். தற்போது யோகிபாபு விஜய் சேதுபதி நடிக்கும் 'ஜூங்கா' படத்தின் ஷூட்டிற்கிற்காக பாரீஸில் இருக்கிறார்.


Click it and Unblock the Notifications











