twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பேசாம ரீமேக்வுட்னு பெயரை மாத்திடுங்க.. மாஸ்டர் முதல் ராட்சசன் வரை.. தமிழ் கதைகளை நாடும் பாலிவுட்!

    |

    சென்னை: அமிதாப் பச்சன் நடித்த பல படங்களை ரீமேக் செய்துதான் கோலிவுட்டில் பாக்ஸ் ஆபிஸ் பில்லாவாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கலக்கினார்.

    ஆனால், இப்போ பாலிவுட்டின் நிலைமையே டோட்டலாக மாறி விட்டது. கோலிவுட், டோலிவுட் ஏன் சாண்டில்வுட் படங்களே இந்திய பாக்ஸ் ஆபிஸில் ராஜாங்கம் நடத்த ஆரம்பித்து விட்டன.

    இந்நிலையில், கோலிவுட் திரைப்படங்களை ரீமேக் செய்ய பல பாலிவுட் நடிகர்களும் முண்டியடித்துக் கொண்டு வருகின்றனர்.

    சுஷாந்த் சிங்கின் 5 டைரிகள்.. அதிரடியாக கைப்பற்றிய போலீஸ்.. கிலியில் பாலிவுட்டின் பெரும் தலைகள்! சுஷாந்த் சிங்கின் 5 டைரிகள்.. அதிரடியாக கைப்பற்றிய போலீஸ்.. கிலியில் பாலிவுட்டின் பெரும் தலைகள்!

    கதை பஞ்சம்

    கதை பஞ்சம்

    பாலிவுட்டில் புதிய கதைகளுக்கு மிகப்பெரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது போலத் தான் தெரிகிறது. தொடர்ந்து ஏகப்பட்ட தமிழ்ப் படங்களை பாலிவுட்டில் ரீமேக் செய்ய பெரும் போட்டி ஆரம்பித்துள்ளது. தமிழ்ப் படங்கள் மட்டுமின்றி தென்னிந்திய சினிமா படங்கள் பக்கம் ஒட்டுமொத்த பாலிவுட் பிரபலங்களின் கவனமும் மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    காஞ்சனா ரீமேக்

    காஞ்சனா ரீமேக்

    இயக்குநர் ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் வெளியான காஞ்சனா திரைப்படத்தை பாலிவுட்டில் லக்‌ஷ்மி எனும் பெயரில் ரீமேக் செய்து நடித்திருந்தார் நடிகர் அக்‌ஷய் குமார். விமர்சன ரீதியாக படம் வெற்றி பெறவில்லை என்றாலும் கூட வசூல் ரீதியாக நல்ல வேட்டையை நடத்தியது. இந்நிலையில், அடுத்து ஒரு தமிழ்ப்படத்தை அவர் ரீமேக் செய்ய உள்ளார்.

    ராட்சசன் இந்தி ரீமேக்

    ராட்சசன் இந்தி ரீமேக்

    இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்த சைக்கோ த்ரில்லர் படமான ராட்சசன் படத்தை தற்போது பாலிவுட்டில் ரீமேக் செய்து நடிக்கப் போகிறார் நடிகர் அக்‌ஷய் குமார். இயக்குநர் ராம்குமார் இயக்கத்தில் வெளியான ராட்சசன் திரைப்படம் பாலிவுட்டில் ரீமேக் ஆனால், வேற லெவல் ஹிட் அடிக்கும் என்பது கன்ஃபார்ம்.

    சல்மான் கானின் மாஸ்டர்

    சல்மான் கானின் மாஸ்டர்

    தளபதி விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தை இந்தியில் நடிகர் சல்மான் கான் ரீமேக் செய்து நடிக்கப் போகிறார். பிக் பாஸ் நிகழ்ச்சிகளை உலகம் முழுவதும் நடத்தி வரும் எண்ட்மோல் ஷைனின் இந்திய நிறுவனம் தான் அந்த படத்தை தயாரிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. சல்மான் கானின் ராதே திரைப்படத்தை பிரபு தேவா இயக்கி இருந்தார். பரத், மேகா ஆகாஷ் உள்ளிட்ட கோலிவுட் பிரபலங்களுக்கும் அந்த படத்தில் வாய்ப்புகள் வழங்கப்பட்டன.

    ஷங்கரின் அந்நியன்

    ஷங்கரின் அந்நியன்

    இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் சியான் விக்ரம் நடிப்பால் மிரட்டிய அந்நியன் திரைப்படத்தையும் பாலிவுட்டில் ரீமேக் செய்யப் போகின்றனர். இயக்குநர் ஷங்கரே இயக்கவுள்ள அந்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகரும் தீபிகா படுகோனேவின் கணவருமான ரன்வீர் சிங் நடிக்க உள்ளார். புதிய கதைகளை விடுத்து பழைய கதைகளை தேடுவது ஏன் தான் என்றும் ரசிகர்கள் புரியாமல் புலம்பித் தவிக்கின்றனர்.

    ரீமேக்வுட்

    ரீமேக்வுட்

    இதுமட்டுமின்றி மாநகரம் ரீமேக், கோலமாவு கோகிலா ரீமேக், வீரம் ரீமேக் என ஏகப்பட்ட தமிழ்ப்படங்கள் ரீமேக் செய்யப்பட உள்ளன. மலையாள திரைப்படமான அய்யப்பனும் கோஷியும் ரீமேக் படத்தில் ஜான் அபிரகாம் மற்றும் அபிஷேக் பச்சன் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. திரிஷ்யம் 2 படத்தை அஜய் தேவ்கன் ஏற்கனவே ரீமேக் செய்யப் போவதாக அஜய் தேவ்கனும் அறிவித்து விட்டார். பேசாமல் பாலிவுட்டை ரீமேக்வுட் என மாற்றி விட்டால் நல்லா இருக்கும் என நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

    ஏன் இப்படி

    ஏன் இப்படி

    ஹாலிவுட் படங்களை ரீமேக் செய்து வந்த பாலிவுட் திரையுலகம் ஏன் இப்படி திடீர்னு தென்னிந்திய சினிமா படங்களை ரீமேக் செய்ய ஆரம்பித்துள்ளது என்று விசாரித்தால், குறைவான பட்ஜெட்டில் அதிக லாபத்தை அடையும் முயற்சி என்றும் அர்ஜுன் ரெட்டியின் இந்தி ரீமேக் கபீர் சிங் 350 கோடிக்கும் மேல் வசூலித்ததும், தென்னிந்திய இயக்குநர்களின் படைப்பாற்றல் என பல விஷயங்களை அடுக்கி வருகின்றனர்.

    English summary
    Master, Ratchasan, Managaram, Kolamavu Kokila, Anniyan and so many Kollywood film will be remade in Hindi.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X