வெயிட்டராக வேலை பார்த்த அப்பா.. அந்த ஓட்டலையே சொந்தமாக்கிய நடிகர்!

சென்னை: இன்று சினிமாவில் டாப் ஹீரோவாக ஜொலித்துக்கொண்டு இருக்கும் பல திரைப்பிரபலங்களின் ஆரம்ப கால வாழ்க்கை, கஷ்டமும் கண்ணீரும் நிறைந்ததாகவே இருந்துள்ளன. ஆனால், கஷ்டத்தை கண்டு துவண்டு போகாமல், அவர்களின் கடுமையான முயற்சியாலும், உழைப்பாலும் இன்று உச்சத்தை தொட்டு, அனைவரையும் வியந்து பார்க்க வைத்துள்ள ஒரு நடிகரை பற்றி இந்த செய்தியில் பார்க்கலாம்.

பாலிவுட்டின் மாஸ் ஹீரோவான சுனில் ஷெட்டியை அவரது ரசிகர்கள் அன்போடு 'அண்ணா'என்று அன்போடு அழைத்து வருகின்றனர். அவர் அண்மையில் ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், தனது வாழ்க்கையில் கடந்து வந்த கசப்பான அனுபவத்தை பகிர்ந்துள்ளார். அதில், தனது தந்தை பெங்களூரிலிருந்து மும்பைக்கு ஓடி வந்து ஒரு தென்னிந்திய உணவகம் ஒன்றில் வேலை செய்தார்.

Bollywood suniel Shetty interview

சுனில் ஷெட்டி: என் தந்தைக்கு 8 வயது இருக்கும் போதே அவரது அப்பா இறந்துவிட்டதால், மூன்று சகோதரிகளை வளர்க்க வேண்டிய பொறுப்பு அவர் கையில் இருந்தது. இதனால், ஒன்பது வயதில் தென்னிந்திய உணவகத்தில் வேலையில் சேர்ந்தார். அங்கு அவருக்கு மேஜையை சுத்தம் செய்ய வேண்டும், ஓட்டலுக்கு தேவையான வேலைகளை செய்ய வேண்டும். அவர் சிறுவனாக இருந்ததால், யார் என்ன வேலை செய்தாலும் செய்து வந்தார். இப்படி கஷ்டப்பட்டும் இரவு தூங்குவதற்கு இடம் இல்லாமல், அரிசி சாக்கில் தூங்குவார்.

கடுமையாக உழைத்தால்: அப்போது தான், அந்த உணவகத்தின் முதலாளி மூன்று கட்டிடங்களை வாங்கினார். அந்த கட்டிடத்தை நிர்வகிக்கும் பணி அப்பாவிடம் வந்தது, இதையடுத்து, முதலாளி ஓய்வு பெற்ற, அப்பா அந்த மூன்று கட்டிடங்களையும் வாங்கினார். இப்போதும் அந்த கட்டிடம் என்னிடம் உள்ளது, அங்குதான் எங்கள் பயணம் தொடங்கியது. அதன் அப்பா வேலை செய்த அந்த உணவகத்தை நான் வாங்கிவிட்டேன். கடுமையாக உழைத்தால் நிச்சயம் முன்னேறலாம் என்பதை என் அப்பாவிடம் நான் கற்றுக்கொண்டேன் என்றார்.

Bollywood suniel Shetty interview

கைவசம் உள்ள படம்: நடிகர் சுனில் ஷெட்டி, விவேக் ஓபராய், சோனாலி குல்கர்னி, சமிக்ஷா பட்நாகர் நடித்த 'தாராவி பேங்க்' என்ற படத்தில் நடித்திருந்தார். மேலும் 'ஹண்டர் டூடேகா நஹி தோடேகா' என்ற படத்திலும் நடித்திருந்தார். தற்போது இவர், நகைச்சுவை திரைப்படத்தின் மூன்றாவது பாகமான 'வெல்கம் டு தி ஜங்கிள்' படத்தில் நடித்துள்ளார். இதில், சஞ்சய் தத், பரேஷ் ராவல் மற்றும் ரவீனா டாண்டன் உள்ளிட்டோ நடித்துள்ளனர். இப்படம் டிசம்பர் மாதம் வெளியாக உள்ளது. மேலும், அதிரடி ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படமான தத்தாவின் பார்டர் படத்தில் பூஜா பட் மீண்டும் இணைந்துள்ளார். இவர்கள் இருவரும் இதற்கு முன் 1997 ம் ஆண்டு வெளியான ஜேபி படத்தில் சேர்ந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X