நடிகர் விவேக் ஓபராய்-க்கு இன்றுடன் 44 வயசு... பிரபலங்கள் வாழ்த்து மழை !

மும்பை : தனது சிறப்பான நடிப்பின் மூலம் பாலிவுட் திரை உலகில் பல கோடி ரசிகர்களை கொண்டு இன்றுவரை மிகச்சிறந்த நாயகனாக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகர் விவேக் ஓபராய்.

Recommended Video

Actor Vivek Request to MEME Creators | APJ Abdul Kalam

பிரபல நடிகர் சுரேஷ் ஓபராய்-யின் மகனான விவேக் ஓபராய் "கம்பனி" என்ற திரைப்படத்தின் மூலம் பாலிவுட் துறையில் அறிமுகம் செய்யப்பட்டார்.

ஆக்சன் திரைப்படங்கள், த்ரில்லர் திரைப்படங்கள் என அனைத்து வகையான திரைப்படங்களிலும் நடித்து மக்கள் மனதில் மிகப்பெரிய இடத்தை பிடித்திருக்கும் நடிகர் விவேக் ஓபராய் செப்டம்பர் 3 ஆம் தேதியான இன்று தனது 44வது பிறந்த நாளை கொண்டாடி வருவதை யொட்டி இவரது ரசிகர்கள் மற்றும் திரைப் பிரபலங்கள் என பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

விவேகம்

விவேகம்

நடிகர் அஜித்குமார் மற்றும் சிறுத்தை சிவா கூட்டணியில் உருவான விவேகம் திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைத் துறைக்கு ஸ்டைலிஷான வில்லனாக அறிமுகமான விவேக் ஓபராய் இந்தியில் பல்வேறு திரைப்படத்தில் நடித்து தற்போது முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

கம்பனி

கம்பனி

வில்லன், ஹீரோ, குணச்சித்திர கதாபாத்திரம் என எந்த ஒரு கதாபாத்திரமாக இருந்தாலும் அதில் தட்டி தூக்கி எறியும் சிறந்த நடிகராக விளங்கி வரும் விவேக் ஓபராய் இயக்குனர் ராம் கோபால் வர்மா இயக்கிய "கம்பனி" என்ற திரைப்படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகம் செய்யப்பட்டார்.

ஆக்சன் படங்களில்

ஆக்சன் படங்களில்

இந்தி திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வந்த விவேக் ஓபராய் நடித்த முதல் படத்திலேயே இவருக்கு பிலிம்பேர் உள்ளிட்ட பல விருதுகள் கிடைக்க அதைத்தொடர்ந்து ரோடு, தம் உள்ளிட்ட ஆக்சன் படங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

இந்தி திரையுலகில்

இந்தி திரையுலகில்

சாதியா, யுவா, மஸ்தி, கிஷ்ணா: த வாரியர் பொயட் உள்ளிட்ட அடுத்தடுத்து இவர் நடித்த பல படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்று வர இந்தி திரையுலகில் மிகப் பெரிய நடிகராக வலம் வர ஆரம்பித்தார்.

நேரடி தமிழ்ப்படத்தில்

நேரடி தமிழ்ப்படத்தில்

இவ்வாறு ஹிந்தி திரை உலகில் கலக்கி வந்த விவேக் ஓபராய் "ரத்த சரித்திரம்" என்ற திரைப்படத்தின் மூலம் தென்னிந்தி ரசிகர்கள் பலருக்கும் அறிமுகமாகி இருந்தாலும் அஜித்தின் விவேகம் திரைப்படத்தின் மூலம் தனது நேரடி முதல் தமிழ் திரைப்படத்தில் நடித்து அசத்தி இருந்தார்.

மலையாளத்திலும் அறிமுகம்

மலையாளத்திலும் அறிமுகம்

தமிழைத் தொடர்ந்து மலையாளம், கன்னடம் என தனது காலடியை பதித்து வரும் விவேக் ஓபராய் சமீபத்தில் பிரித்திவிராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்து மிகப்பெரிய வெற்றி பெற்ற " லூசிபர் " திரைப்படத்தின் மூலம் மலையாளத் திரையுலகிலும் அறிமுகமானார்.

44வது பிறந்த நாள்

44வது பிறந்த நாள்

இவ்வாறு இந்திய நடிகர்களில் மிக பிரபலமானவராக அனைத்து மொழியிலும் ரசிகர்களைக் கொண்டு வெற்றி வலம் வந்து கொண்டிருக்கும் விவேக் ஓபராய் செப்டம்பர் 3ம் தேதியான இன்று தனது 44வது பிறந்த நாளை கொண்டாடி வருவதையொட்டி இவரது நண்பர்கள், ரசிகர்கள் மற்றும் பல திரைப் பிரபலங்கள் என பலரும் இவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X