நள்ளிரவில் தாயை பார்க்க பறந்தோடும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர் கான் - கசிந்தது ரகசியம்
மும்பை: நடிகர் அமிர் கான் தனது தாயை நள்ளிரவில் சந்திக்கும் தகவல் வெளியாகியுள்ளது.
பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர்காம் தனது 54ம் பிறந்தநாள் அன்று ஒரு பத்திரிகையாளர் கூட்டத்தின் போது தனது அடுத்த ப்ராஜெக்ட் பற்றி அறிவித்தார். அது தான் 1994ம் ஆண்டு வெளியான ஹாலிவுட் திரைப்படமான ஃபாரஸ்ட் கம்ப் திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக் லால் சிங் சதா.

இதில் அமீர்கான் முக்கிய கதாபாத்திரத்திலும் அவருக்கு ஜோடியாக கரீனா கபூர் நடிக்கிறார். ஃபாரஸ்ட் கம்ப் திரைப்படம் 1986ம் ஆண்டு வெளியான ஒரு நாவலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஹாலிவுட் திரைப்படம் இதன் ஹிந்தி ரீமேக் திரைப்படத்தில் அமீர் கான் டாம் ஹாங்க்ஸ் நடித்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்த படத்திற்காக அமீர் கான் 20 கிலோ வரை தனது எடையை குறைத்துள்ளார். அதற்காக அவர் கடுமையான டயட் மேற்கொள்கிறார் என்கின்றனர் அவரது நெருங்கிய வட்டாரங்கள்.இருப்பினும் இந்த பெர்ஃபெக்ஷனிஸ்ட்டு தனது தாய் ஜீனத்திடம் தனக்காக கபாப்களை செய்து தருமாறு கேட்டு சாப்பிட்டுவருகிறார்.
அமீர் கான் வேகவைத்த காய்கறிகள், கீரைகள், டோஃபு, பயறு மற்றும் பல தானிய ரோட்டிகளால் செய்யப்பட்ட மிகவும் கடுமையான சிறப்பு புரத சத்து மிகுந்த உணவை தான் எடுத்துக்கொண்டு வருகிறார். இருப்பினும் இந்த சூப்பர் ஸ்டார் சிலவற்றிக்காக ஏங்க துவங்கிவிட்டார். அதற்காக தான் நள்ளிரவில் தனது தாய் வீட்டிற்கு அடிக்கடி பறந்து வருகிறார்.
அமீர் கானின் தாய் வீடு தனது பாந்த்ரா இல்லத்தில் இருந்து மிக அருகில் தான் இருக்கிறது. அவரது தாய் அவருக்கு உகந்த சைவ கபாப்களை தயார் செய்து தனது குளிர்சாதன பெட்டியில் நிரப்பி வைத்துள்ளார். அவர் தேவைப்படும்போதேல்லாம் செய்ய தயாராக சேமித்து வைத்துள்ளார் அமீர் கானின் தாயார் என்கிறார்கள் நெருங்கிய வட்டாரங்கள்.
அமீர் கான் நடிக்கும் லால் சிங் சாத திரைப்படத்தில் அவருடன் இணைந்து நடிக்கவுள்ளனர் நாம் தமிழ் சினிமாவின் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் 2020ல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











