நடிகர் அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்.. போலீசார் அதிரடி சோதனை.. ரசிகர்கள் அதிர்ச்சி!

சென்னை: தமிழ் திரையுலகில் தனித்தன்மையுடன் திகழும் நடிகர் அஜித் குமாரின் வீட்டை குறிவைத்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில மாதங்களாக அரசியல் பிரமுகர்கள், பிரபல தொழிலதிபர்கள் மற்றும் திரைப்பட நட்சத்திரங்களின் வீடுகளுக்கு மிரட்டல் அழைப்புகள் வந்து பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், இப்போது அஜித் வீடு குறிவைக்கப்பட்டிருப்பது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்று காலை சென்னை டி.ஜி.பி அலுவலகத்திற்கு மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. அதில், நடிகர் அஜித்குமார், ரம்யா கிருஷ்ணன், எஸ்.வி.சேகர், சத்தியமூர்த்தி பவன், ஈவிபி பிலிம் சிட்டி ஆகியோரின் வீட்டிற்கு வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மெயிலில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து போலீசார், சென்னை அண்ணாநகர் பகுதியில் அமைந்துள்ள அஜித்குமாரின் வீட்டிற்கு போலீசார் உடனடியாக அங்கு விரைந்து சென்று, முழு பகுதியையும் சுற்றிவளைத்து பாதுகாப்பு வலையை ஏற்படுத்தினர். வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் பிரிவு உதவியுடன் வீட்டின் உள்ளேயும் வெளியேயும் தீவிர சோதனையின் நடத்தினர்.

Ajith Kumar Bomb Threat

அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்: இந்த சோதனையில் எவ்வித வெடிகுண்டும் அல்லது சந்தேக பொருளும் கண்டுபிடிக்கப்படாததால், வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்துள்ளது. ஆனால், அச்சுறுத்தும் வகையில் மிரட்டல் விடுத்தவர் யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. அழைப்பு வந்த மெயில் ஐடி கண்டறிய சைபர் பிரிவு அதிகாரிகள் தொழில்நுட்ப ரீதியாக பணியில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து, அஜித் தனது குடும்பத்துடன் பாதுகாப்பாக இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். அதேசமயம், ரசிகர்கள் சமூக வலைதளங்களில் "அஜித் சார் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்" எனக் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

தொடர்ந்து மிரட்டல்: அதேபோல, ரம்யாகிருஷ்ணன், எஸ்.வி.சேகர், சத்தியமூர்த்தி பவன், ஈவிபி பிலிம் சிட்டி ஆகிய இடங்களில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். சமீபத்தில் இதேபோன்ற மிரட்டல் அழைப்புகள் நடிகர்கள் த்ரிஷா, விஜய், சூர்யா உள்ளிட்ட பல பிரபலங்களின் வீடுகளுக்கும் வந்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் திரையுலகில் மீண்டும் பாதுகாப்பு குறித்த அச்சம் எழுந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X