பிகில் படத்துக்கு எதிர்ப்பு.. விஜய் வீட்டுக்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல்!
நடிகர் விஜய்யின் வீட்டில் குண்டு வெடிக்கப் போவதாக காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அவரது வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர்.
Recommended Video
சென்னை: நடிகர் விஜய்யின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விஜய். இவர் நடித்துள்ள பிகில் திரைப்படம் கடந்த 25ம் தேதி வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

பிகில் திரைப்படம் நான்கு நாட்களில் ரூ.150 கோடி வசூல் செய்துள்ளது. இப்படம் முந்தைய படங்களின் வசூலை எல்லாம் பின்னுக்கு தள்ளும் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று காலை சென்னை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்த மர்ம நபர் ஒருவர், நடிகர் விஜய்யின் வீட்டில் இன்னும் சற்று நேரத்தில் வெடிகுண்டு வெடிக்கப்போவதாக கூறிவிட்டு, தொலைப்பேசி அழைப்பை துண்டித்துவிட்டார். இதையடுத்து போலீசார் உஷார்படுத்தப்பட்டனார்.
நீலாங்கரை மற்றும் சாலிகிராமத்தில் உள்ள விஜய்யின் வீடு, வடபழனியில் உள்ள ஷோபா திருமண மண்டபம் ஆகிய இடங்களில் போலீசார் தீவிரமாக சோதனை நடத்தினர். ஆனால் மர்ம நபர் கூறியபடி வெடிகுண்டு எதுவும் அவ்விடங்களில் இல்லை.
விஜய்யை பிடிக்காத யாரோ சிலர் கிளப்பிவிட்ட வதந்தி தான் அது என போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்த செல்பேசி எண்ணை வைத்து, அந்த மர்ம நபர் யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெடிகுண்டு மிரட்டல் விடுத்த அந்த நபர் போரூர் ஆலப்பாக்கம் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அவரை பிடிக்க போலீசார் முயற்சித்து வருகின்றனர். வெடிகுண்டு மிரட்டலால் விஜய் வீடு அமைந்திருக்கும் பகுதிகளில் பரபரப்பு காணப்பட்டது.


Click it and Unblock the Notifications











