நடிகர் சூர்யாவின் பழைய அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. போலீஸ் சோதனை.. பரபரப்பு!
சென்னை: சென்னை ஆழ்வார்பேட்டையில் செயல்பட்டு வந்த நடிகர் சூர்யாவின் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து அங்கு போலீஸார் சோதனையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நடிகர் சூர்யாவின் பழைய அலுவலகம் சென்னை ஆழ்வார்பேட்டையில் செயல்பட்டு வந்தது. ஆனால் நீண்ட நாட்களுக்கு முன்பே அந்த அலுவலகத்தை நடிகர் சூர்யா காலி செய்து விட்டார்.

இந்நிலையில் காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட மர்ம நபர், சூர்யாவின் அலுவலகம் மாற்றப்பட்டது தெரியாமல் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் இயங்கும் சூர்யாவின் அலுவலகத்தில் வெடி குண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்தார்.
இந்த மிரட்டலை அடுத்து மோப்ப நாயுடன் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் போலீசார் ஆழ்வார்பேட்டையில் உள்ள அலவலகத்தில் சோதனை நடத்தினர். சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்தது.
இந்த வெடிகுண்டு மிரட்டல் மற்றும் சோதனைகளால் சென்னை ஆழ்வார்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மத்திய மற்றும் மாநில அரசாங்க கொள்கைகளுக்கு எதிராக குறிப்பாக கல்வி மற்றும் பாடத்திட்டம் குறித்து சூர்யா குரல் கொடுத்து வருகிறார்.
Recommended Video
வெடிகுண்டு மிரட்டலுக்குப் பின்னால் இருந்த நபர் அரசியல் உந்துதலால் மிரட்டினாரா அல்லது மனநலம் பாதிக்கப்பட்டவரா என்பது பற்றி தகவல் இல்லை. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படம் அக்டோபர் 30 ஆம் தேதி அமேசான் பிரைம் வீடியோவில் வெளியிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











