நள்ளிரவில் நடிகர் விஜய் வீட்டில் நடத்தப்பட்ட திடீர் சோதனை... பரபரப்பை கிளப்பிய போன் கால்!

சென்னை: நடிகர் விஜய் வீட்டில் நள்ளிரவில் போலீசார் திடீர் சோதனை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவர் நடிகர் விஜய். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ளார் நடிகர் விஜய்.

தற்போது இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

நள்ளிரவில் திடீர் சோதனை

நள்ளிரவில் திடீர் சோதனை

இதனை தொடர்ந்து தெலுங்கு இயக்குநரின் படத்தில் நடிக்கிறார் நடிகர் விஜய். இந்நிலையில் நடிகர் விஜய்யின் வீட்டில் நேற்று நள்ளிரவு திடீர் சோதனை நடத்தப்பட்டுள்ளது. நடிகர் விஜய் சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.

விஜய் வீட்டுக்கு வெடி குண்டு மிரட்டல்

விஜய் வீட்டுக்கு வெடி குண்டு மிரட்டல்


இந்நிலையில், நேற்று இரவு காவல்துறை கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட மர்ம நபர் நடிகர் விஜய் வீட்டில் வெடிகுண்டு உள்ளதாக மிரட்டல் விடுத்தார். அந்த மிரட்டல் அழைப்பை தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் நடிகர் விஜய்யின் வீட்டிற்கு நள்ளிரவு விரைந்து சென்று சோதனை நடத்தினர்.

மிரட்டல் விடுத்தது யார்?

மிரட்டல் விடுத்தது யார்?

இந்த சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் ஒரு வதந்தி என தெரியவந்தது. இதையடுத்து காவல்துறை கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார் என போலீசார் உடனடியாக விசாரணை மேற்கொண்டனர்.

ஏற்கனவே பல நடிகர்களுக்கு..

ஏற்கனவே பல நடிகர்களுக்கு..

அதில் விழுப்புரத்தை சேர்ந்த நபர் ஒருவர் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு நடிகர் விஜய் வீட்டில் வெடிகுண்டு உள்ளது என பொய்யான மிரட்டல் விடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த நபர் ஏற்கனவே பல்வேறு சினிமா பிரபலங்களின் வீடுகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Recommended Video

9 Years Of Thuppaki Movie | Rewind Raja | Filmibeat Tamil
அஜித் வீட்டுக்கு மிரட்டல்

அஜித் வீட்டுக்கு மிரட்டல்

இந்த நபர் நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் அஜித் வீட்டிற்கும் வெடி குண்டு மிரட்டல் விடுத்துள்ளார். இதனை தொடர்ந்து அந்த நபரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் மன நலம் பாதிக்கப்பட்டவர் என தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X