Bommi: ரஜினியுடன் நடித்த சந்திரமுகி பொம்மியா இது..? 18 ஆண்டுகளுக்குப் பிறகு அடித்த ஜாக்பாட்..!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் 2005ம் ஆண்டு வெளியான திரைப்படம் சந்திரமுகி.

அதில், பொம்மி என்ற குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தவர் பிரஹர்ஷேதா.

சந்திரமுகி தவிர வேலன், ராஜ ராஜேஸ்வரி போன்ற படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் 18 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் சீரியல் மூலம் கம்பேக் கொடுக்கவுள்ளாராம் பிரஹர்ஷேதா.

 Bommi: Chandramukhi fame Bommi comeback to Serial after 18 years

சந்திரமுகி பொம்மிக்கு அடித்த ஜாக்பாட்: சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் மெஹா ஹிட் அடித்த திரைப்படம் சந்திரமுகி. பி வாசு இயக்கத்தில் 2005ம் ஆண்டு வெளியான இத்திரைப்படம் ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. ரஜினி, வடிவேலு காம்போவில் காமெடியில் தெறிக்கவிட்ட சந்திரமுகி படத்தில், பொம்மி என்ற கேரக்டரில் நடித்திருந்தார் பிரஹர்ஷேதா.

சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் பொம்மி என்ற கேரக்டரில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார் பிரஹர்ஷேதா. 'அத்திந்தோம்' பாடலில் க்யூட்டாக டான்ஸும் ஆடி அசத்தியிருந்தார். சந்திரமுகி படத்தில் கிடைத்த வரவேற்பால், வேலன், ராஜ ராஜேஸ்வரி படங்களிலும் குழந்தை நட்சத்திரமாகவே நடித்திருந்தார். அதன் பிறகு சினிமாவில் இருந்து விலகியிருந்த பிரஹர்ஷேதா, தற்போது திருமணம் முடிந்து ஒரு குழந்தைக்கும் அம்மாவாகிவிட்டார்.

இந்நிலையில், 18 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளாராம் பொம்மி பிரஹர்ஷேதா. ஆனால், இந்த முறை சினிமாவாக இல்லாமல் சீரியலில் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்கான பேச்சுவார்த்தை முடிந்துவிட்டதாகவும், விரைவில் சீரியலில் நடிக்கத் தொடங்குவார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழில் முன்னணி சேனலில் ஒளிபரப்பாகும் சீரியலில் அவர் நடிக்கவுள்ளாராம்.

இதற்கான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 18 ஆண்டுகளுக்குப் பின்னர் சீரியலில் களமிறங்கும் பொம்மி பிரஹர்ஷேதா, அப்படியே சினிமாவிலும் கவனம் செலுத்துவார் என சொல்லப்படுகிறது. சந்திரமுகி படத்தில் பொம்மி என்ற குழந்தை நட்சத்திரமாக நடித்த பிரஹர்ஷேதாவை மீண்டும் சீரியலில் பார்க்க ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பில் உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X