மயங்கி விழுந்தார்.. ஜேம்ஸ்பாண்ட் பட நடிகைக்கு என்னாச்சு? இரங்கல் தெரிவித்த நிலையில் திடீர் மறுப்பு

By

வாஷிங்டன்: ஜேம்ஸ்பாண்ட் பட நடிகை தன்யா ராபர்ட்ஸ் மரணமடைந்து விட்டதாக செய்தி வெளியான நிலையில், அவர் கணவர் திடீரென மறுத்துள்ளார்.

பிரபல ஹாலிவுட் நடிகை தன்யா ராபர்ட்ஸ். ஃபோர்ஸ்டு என்ட்ரி என்ற படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர்.

தொடர்ந்து ஃபிங்கர்ஸ், டூரிஸ்ட் டிராப், த பீஸ்ட் மாஸ்டர், ஷீனா உட்பட பல படங்களில் நடித்தார்.

ஜேம்ஸ்பாண்ட் படம்

ஜேம்ஸ்பாண்ட் படம்

ரோஜர் மூர் நடித்த ஜேம்ஸ்பாண்ட் படமான 'எ வியூ டு கில்' படத்தில் நடித்ததன் மூலம் இன்னும் பிரபலமானார். இந்தப் படம், வசூல் ரீதியாக சாதனை படைத்தது. இது ரோஜர் மூர் நடித்த கடைசி ஜேம்ஸ் பாண்ட் படம் என்பது குறிப்பிடத்தக்கது. சினிமாவில் நடித்துகொண்டே டிவி. சீரியல்களில் நடித்துவந்தார்.

தட் 70ஸ் ஷோ

தட் 70ஸ் ஷோ

சார்லிஸ் ஏஞ்சல்ஸ் தொடரில் நடித்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்றவர் இவர். இவர் நடித்த 'தட் 70ஸ் ஷோ' என்கிற தொடரும் இவருக்குப் பெயர் வாங்கித் தந்தது. இவர் கடந்த டிசம்பர் 24 ஆம் தேதி தனது செல்ல நாயுடன் நடைபயிற்சிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென மயங்கி விழுந்தார்.

தீவிர சிகிச்சை

தீவிர சிகிச்சை

இதையடுத்து லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர் உயிரிழந்ததாக செய்திகள் வெளியானது. இதை தன்யாவின் நீண்ட நாள் தோழி, மைக் பிங்கேல் உறுதிப்படுத்தி இருந்தார்.

ரசிகர்களை நேசித்தார்

ரசிகர்களை நேசித்தார்

'இந்த செய்தியை கேட்டதும் நிலை குலைந்துவிட்டேன். ஒளியை இழந்துவிட்டதை போல உணர்கிறேன். அவர் அழகானவர், சிறந்த மனதைக் கொண்டவர். தனது ரசிகர்களை நேசித்தார் என்று அவருக்கான இரங்கலில் தெரிவித்திருந்தார், மைக் பிங்கேல். இதையடுத்து ஹாலிவுட் பிரபலங்களும் அவர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர்.

மனைவி இறக்கவில்லை

மனைவி இறக்கவில்லை

இந்நிலையில், தன்யாவின் பாய்ஃபிரண்ட் மற்றும் கணவர் என்று சொல்லிக் கொள்ளும் லான்ஸ் ஓ ப்ரையன், தனது மனைவி இறக்கவில்லை என்றும் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மீடியாவிடம் தெரிவித்துள்ளார். இது ஹாலிவுட்டில் திடீர் குழப்பதை ஏற்படுத்தி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X