சிகிச்சைக்கு உதவ வேண்டும்... முன்னணி நடிகர்களிடம் மீண்டும் கோரிக்கை வைத்த போண்டா மணி

சென்னை: தமிழ்த் திரைப்படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் காமெடி காட்சிகளில் நடித்து புகழ் பெற்றவர் போண்டா மணி.

மறைந்த நடிகர் விவேக், வடிவேலு உட்பட பல காமெடி நடிகர்களுடன் இணைந்து போண்டா மணி நடித்துள்ளார்.

இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டு ஓமந்துரார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த போண்டா மணி வீடு திரும்பினார்.

அடிச்சுக் கூட கேப்பாங்க

அடிச்சுக் கூட கேப்பாங்க

தமிழில் ரஜினி, விஜய், அஜித், வடிவேலு, மறைந்த விவேக் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து புகழ்பெற்றவர் காமெடி நடிகர் போண்டா மணி. வடிவேலு, விவேக் ஆகியோருடன் அவர் நடித்த காமெடி காட்சிகள் சூப்பர் ஹிட் அடித்துள்ளன. 'கண்ணும் கண்ணும்' படத்தில் ஒரு காட்சியில், குளத்தில் இருந்து திடீரென வெளியே வரும் போண்டா மணி, கரையில் நிற்கும் வடிவேலுவிடம் "அவன் உன்கிட்ட என்ன சொன்னான்னு கேப்பாங்க?, ஒன்னுமே சொல்டாதீய... அடிச்சுக் கூட கேப்பாங்க... அப்பயும் ஒன்னும் சொல்லிடாதீய" என வடிவேலுவிடம் சொல்லிவிட்டு மறைந்துவிடுவார். கடைசி வரை வடிவேலுவுக்கு என்ன நடக்கிறது என்பதே தெரியாமல், போலீசாரிடம் அடி வாங்குவார். இந்தக் காட்சியை பார்க்கும் யாரும் சிரிக்காமல் இருக்க முடியாது.

சிறுநீரகம் செயலிழந்தது

சிறுநீரகம் செயலிழந்தது

சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்தாலும் தனது வித்தியாசமான உடல்மொழி, அப்பாவித்தனமான டயலாக் டெலிவரி போன்றவைகளால் ரசிகர்களை சிரிக்க வைத்தவர் போண்டா மணியின் இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்துள்ளன. இதனால் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த போண்டா மணியை கடந்த சில தினங்களுக்கு முன்னர், மருத்துவத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். மேலும், போண்டா மணிக்கு முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சை வழங்கப்படும் என தெரிவித்திருந்தார்.

வடிவேலு, பார்த்திபன் உதவி

வடிவேலு, பார்த்திபன் உதவி

பருவக் காதல் என்ற படத்திற்காக நிஜ சாக்கடையில் இறங்கி நடித்ததால் தான், போண்டா மணிக்கு நுரையீரல் பாதிப்புடன் மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக அவரே கூறியிருந்தார். இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போண்டா மணி, தன்னுடன் நடித்த நடிகர்கள் சிகிச்சைக்கு உதவ வேண்டுமென வீடியோ வெளியிட்டு இருந்தார். இதனையடுத்து நடிகர்கள் பார்த்திபன், வடிவேலு, மயில்சாமி உள்ளிட்ட பலரும் போண்டா மணிக்கு உதவி செய்தனர். முன்னதாக, மறைந்த நடிகர் விவேக் உயிரோட இருந்திருந்தால் யாரிடமும் உதவி கேட்கும் நிலை வந்திருக்காது எனவும் போண்டா மணி பேசியிருந்தார்.

அதிமுக நிதி உதவி

அதிமுக நிதி உதவி

இந்நிலையில், மருத்துவமனையில் இருந்து சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய போண்டா மணி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், "அமைச்சர் மா சுப்பிரமணியன் மருத்துவமனையில் வந்து நலம் விசாரித்தார். முதலமைச்சரின் உதவியாளரும் அவ்வப்போது தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார்கள். நான் உழைத்த அதிமுக கட்சி சார்பில் யாரும் வந்து நலம் விசாரிக்காதது மனவருத்தம் அளித்தது. ஆனால், இன்று முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், பெஞ்சமின் எனது இல்லம் தேடி வந்து நலம் விசாரித்து நிதி உதவி வழங்கியது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது" எனக் கூறினார்.

முன்னனி நடிகர்களுக்கு மீண்டும் கோரிக்கை

முன்னனி நடிகர்களுக்கு மீண்டும் கோரிக்கை

மேலும், "எனக்கு உதவிய நடிகர்கள், நடிகர் சங்கத்தினருக்கு மிக்க நன்றி. நான் ரஜினி, அஜித், விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளேன். எனக்கு சிறுநீரக அறுவை சிகிச்சை செய்ய இருப்பதால் என் துறை சார்ந்தவர்கள் உதவி செய்வார்கள் என நம்புகிறேன். விரைவில் நான் உடல்நலம் பெற்று மீண்டும் வந்து மக்களை சிரிக்க வைக்க வேண்டும்" எனவும் நடிகர் போண்டா மணி உருக்கமாக தெரிவித்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X