பல முறை முறையிட்டும் அஜித் எனக்கு உதவல.. போண்டா மணி கடைசியா கொடுத்த கண்ணீர் பேட்டி!

சென்னை: பிரபல காமெடி நடிகர் போண்டா மணி உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 60. ஆரம்பத்தில் அஜித்துக்கு நான் உதவி செய்திருந்தேன். ஆனால், அவர் பதிலுக்கு எனக்கு எதுவுமே செய்யவில்லை என கடைசியாக போண்டா மணி அளித்த கண்ணீர் பேட்டி சமூக வலைதளங்களில் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக அஜித் வருவதற்கு முன்பாக மைனர் மாப்பிள்ளை படத்தில் அஜித்தை நடிக்க வைத்ததே நான் தான் என போண்டா மணி பேட்டி ஒன்றில் தெரிவித்து இருந்தார். ஆனால், உடல் நலக்குறைவாக இருக்கிறேன். ஏதாவது பண உதவி செய்ய முடியுமா என பல முறை கேட்டும் அஜித் தனக்கு உதவியே செய்யவில்லை என அந்த பேட்டியில் கண்ணீர் மல்க போண்டா மணி பேசியுள்ளார்.

Bonda Mani reveals how Ajith refused to help him in his bad days

அதே போல வடிவேலுவும் கடைசி வரை போண்டா மணிக்கு எந்தவொரு உதவியும் செய்யவில்லை என்கிற குற்றச்சாட்டையும் அவர் வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அடிச்சு கேட்டாலும் சொல்லாத: சுந்தரா டிராவல்ஸ் படத்தில் பாம்பை பஸ்ஸுக்குள் விட்டு அலப்பறை செய்து அசத்திய போண்டா மணி. தீவிரவாதி போல இருந்து கொண்டு அடிச்சு கேட்டாலும் சொல்லாத என வடிவேலுவை நேக்காக கோர்த்து விட்டுப் போகும் காட்சிகள் எல்லாம் எப்போது பார்த்தாலும் குபீரென சிரிக்க வைத்து விடும். பல கோடி மக்களை சிரிக்க வைத்து வந்த சினிமா நடிகர்கள் துணை காமெடியன்களாக உள்ள நிலையில், கடைசி வரை பெரிய நடிகர்கள் அளவுக்கு பிரம்மாதமான வாழ்க்கையை வாழ முடியாமலே போய் விடுகிறது.

அஜித்துக்கு போண்டா மணி செய்த உதவி: வி.சி. குகநாதன் இயக்கத்தில் அஜித் குமார் நடித்து 1996ல் வெளியான படம் மைனர் மாப்பிள்ளை. அந்த படத்தில் முதலில் ரஞ்சித் தான் நடித்து வந்திருக்கிறார். ஏதோ சில காரணங்களுக்காக அவர் வெளியேற அடுத்து ஹீரோவாக யாரை போடலாம் என யோசித்துக் கொண்டிருக்கும் போது அங்கே இருந்த போண்டா மணி தான் அஜித்தை இந்த படத்தில் புக் செய்யலாம் என சொன்னதாக அந்த பேட்டியில் அவரே கூறியுள்ளார்.

வாய்ப்புக் கூட தரல: சினிமாவில் பெரிய நடிகராக வந்தவுடன் உங்களுக்கு உதவி செய்யுறேன் மணி என சொன்ன அஜித் குமார் பெரிய ஹீரோவான பின்னர் கூட எந்தவொரு படத்திலும் அவருக்கு வாய்ப்பே தரவில்லையாம். எப்போது கேட்டாலும், அடுத்த படத்தில் பார்க்கிறேன் என்றே தட்டிக் கழித்து வந்தாராம். சிட்டிசன் படத்தில் கூட அஜித் சான்ஸ் வாங்கித் தரவில்லையாம். இயக்குநரே போண்டா மணியை அந்த அத்திப்பட்டி போர்ஷனில் நடிக்க வைத்த நிலையில், பரவாயில்லையே எப்படியோ உள்ளே வந்துட்டீங்க, நடிகரை விட இயக்குநரை தான் ஃபாலோ செய்ய வேண்டும் என்று அட்வைஸ் வேறு சொன்னதாக அந்த பேட்டியில் சொல்லியிருக்கிறார்.

பல முறை முறையிட்டேன்: சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு அதிக பணம் தேவைப்பட்ட நிலையில், அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திராவிடம் பலமுறை முறையிட்டேன். அஜித்திடம் சொல்வதாக வாக்கு கொடுத்தார். ஆனால், கடைசி வரை அஜித் உதவியே செய்யவில்லை என போண்டா மணி கடைசியாக அளித்த பேட்டியில் மனம் நொந்து பேசியிருந்தார். இன்று அவர் உடல்நலக்குறைவு காரணமாகவே உயிரிழந்து விட்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X