மம்முட்டியின் ஒன்...இந்தி ரீமேக் உரிமத்தை வாங்கிய போனி கபூர்

மும்பை : மலையாளத்தில் மம்முட்டி நடத்த படம் ஒன். இந்த படம் இந்த ஆண்டு மார்ச் 26 அன்று தியேட்டரில் ரிலீஸ் செய்யப்பட்டது. முழுக்க முழுக்க அரசியல் படமான இந்த படத்தில் மம்முட்டி கேரள முதல்வர் கேரக்டரில் நடித்திருந்தார்.

அரசியல், அரசின் கொள்கைகள், நேர்மையான முதல்வர் எப்படி இருக்க வேண்டும் என்பதை சொல்லும் படமாக ஒன் அமைக்கப்பட்டிருந்தது. ஊழல் செய்யும் அமைச்சர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் முதல்வர், அதனால் சந்திக்கும் நெருக்கடிகள், பிரச்சனைகள் பற்றியது தான் படத்தின் கதை.

அரசியல் படம்

அரசியல் படம்


பின்னர் இந்த படம் நெட்ஃப்ளிக்சில் வெளியிடப்பட்டது. இந்த படத்தை சந்தோஷ் விஸ்வநாத் இயக்கி இருந்தார். பாக்ஸ் ஆபீசில் சொல்லி கொள்ளும் அளவிற்கு ஓரளவு வசூலை பெற்றது. இந்த படத்தை ஸ்ரீலட்சுமி ஆர் தயாரித்திருந்தார்.

இந்தியில் ரீமேக்

இந்தியில் ரீமேக்

இந்நிலையில் இந்த படத்தை இந்தியில் ரீமேக் செய்யும் உரிமத்தை பிரபல தயாரிப்பாளர் போனி கபூர் பெற்றுள்ளார். ஒன் படத்தின் இந்தி ரீமேக்கில் பாலிவுட்டின் மெகா ஸ்டார் நடிகர் ஒருவரை நடிக்க வைக்க போனி கபூர் திட்டமிட்டுள்ளார்.

மம்முட்டி கேரக்டரில் அனில் கபூரா

மம்முட்டி கேரக்டரில் அனில் கபூரா

ஆனால் அதற்குள் இந்த படத்தில் அனில் கபூர், மம்முட்டி நடித்த முதல்வர் ரோலில் நடிக்க உள்ளதாக தகவல் பரவியது. ஒன் படத்தில் கேரள முதல்வர் கடக்கல் சந்திரன் என்ற கேரக்டரில் மம்முட்டி நடித்திருந்தார்.

அடுத்த ஆண்டு படப்பிடிப்பு

அடுத்த ஆண்டு படப்பிடிப்பு

இந்தி ரீமேக் படத்தின் படப்பிடிப்புக்கள் 2022 ம் ஆண்டின் துவக்கத்தில் ஆரம்பிக்கப்படலாம் என கூறப்படுகிறது. அதற்கு முன் ஹீரோ, டைரக்டர் குறித்து முடிவு செய்து, விரைவில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X