போனி கபூர் தயாரிப்பில் ஆர்ஜே பாலாஜி நடிக்கும் அந்த படத்துக்கு அதே டைட்டில் தானாம்.. ரிலீஸ் எப்போ?

சென்னை: எல்கேஜி படத்தின் மூலம் ஹீரோவான ஆர்ஜே பாலாஜி மூக்குத்தி அம்மன் படத்தில் இயக்குநர் அவதாரம் எடுத்திருந்தார்.

இந்நிலையில், ஆர்ஜே பாலாஜி மற்றும் என்ஜே சரவணன் இணைந்து இயக்கி உள்ள படத்தின் டைட்டில் மற்றும் ரிலீஸ் தேதியை தயாரிப்பாளர் போனி கபூர் தற்போது அறிவித்துள்ளார்.

ஆர்ஜே பாலாஜி படத்தோட அப்டேட் வெளியான நிலையில், அஜித் குமாரின் அடுத்த படத்தோட அப்டேட் எப்போ சொல்வீங்க போனி கபூர் என ரசிகர்கள் நச்சரித்து வருகின்றனர்.

இந்தி பட ரீமேக்

இந்தி பட ரீமேக்

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவரும் பாலிவுட் தயாரிப்பாளருமான போனி கபூரிடம் ஏகப்பட்ட பாலிவுட் படங்களின் ரீமேக் உரிமை உள்ளன. நடிகர் அஜித் குமாரை வைத்து பிங்க் படத்தின் ரீமேக்கை தமிழில் நேர்கொண்ட பார்வை என எடுத்தார். டோலிவுட்டிலும் பவன் கல்யாணை வைத்து அதே படத்தை ரீமேக் செய்தார். இந்நிலையில், தற்போது பதாய் ஹோ எனும் இந்தி படத்தை ஆர்ஜே பாலாஜியை வைத்து ரீமேக் செய்துள்ளார்.

ரீமேக்காகும் ஆயுஷ்மான் குரானா படங்கள்

ரீமேக்காகும் ஆயுஷ்மான் குரானா படங்கள்

பாலிவுட்டின் இளம் முன்னணி நடிகர் ஆயுஷ்மான் குரானா நடிக்கும் படங்கள் தான் பெரும்பாலும், தற்போது தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளில் ரீமேக் ஆகி வருகின்றன. மற்றபடி இங்கே உள்ள படங்களை பாலிவுட்டின் முன்னணி நடிகர்கள் ரீமேக் செய்து வருகின்றனர். விக்கி டோனர் திரைப்படம் தாராள பிரபுவாக வந்த நிலையில், அந்தாதூன் திரைப்படம் அந்தகனாக உருவாகி வருகிறது. இந்நிலையில், ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியான பதாய் ஹோ படத்தின் ரீமேக் தமிழில் ஆர்ஜே பாலாஜி நடிப்பில் உருவாகி வருகிறது. உதயநிதி ஸ்டாலின் நடித்து வரும் நெஞ்சுக்கு நீதி படமும் ஆயுஷ்மான் குரானா நடித்த ஆர்ட்டிக்கள் 15 படம் என்பது குறிப்பிடத்தக்கது.

வீட்ல விசேஷம்

வீட்ல விசேஷம்

1994ம் ஆண்டு பாக்கியராஜ் இயக்கி நடித்த வீட்ல விசேஷங்க படத்தின் டைட்டில் தான் இந்த படத்துக்கு வைத்துள்ளனர் என தகவல் பரவிய நிலையில், அதனை மறுத்திருந்தார் ஆர்.ஜே. பாலாஜி. இந்நிலையில், தற்போது வீட்ல விசேஷம் எனும் டைட்டிலில் இந்த படம் உருவாகி உள்ளது. சத்யராஜ், ஊர்வசி உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.

எப்போ ரிலீஸ்

எப்போ ரிலீஸ்

எல்கேஜி படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான ஆர்ஜே பாலாஜி அடுத்ததாக இயக்குநர் என்.ஜே. சரவணன் உடன் இணைந்து மூக்குத்தி அம்மன் படத்தை இயக்கினார். இந்நிலையில், மீண்டும் அதே கூட்டணி இணைந்து இயக்கியுள்ள வீட்ல விசேஷம் திரைப்படம் வரும் ஜூன் 17ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

என்ன கதை

என்ன கதை

வயதான அம்மா மீண்டும் கர்ப்பமாக 20 வயதை கடந்த மூத்த மகன் எப்படி அதை ஏற்றுக் கொள்கிறார் என்பதை நகைச்சுவையுடன் சொல்லியிருக்கும் படம் தான் பதாய் ஹோ. சமீபத்தில், பிருத்விராஜ், மோகன்லால் நடிப்பில் வெளியான ப்ரோ டாடி திரைப்படமும் இதே கதையை கொண்ட படமாகவே உருவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X