வாவ்.. FILMIBEAT பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்டை உறுதி செய்த தயாரிப்பாளர் போனி கபூர்.. வலிமை வசூல்!
சென்னை: வலிமை படத்தின் வசூல் குறித்து ஏகப்பட்ட மீடியாக்கள், டிராக்கர்கள் பல வித பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்டை கொடுத்து வந்த நிலையில், FILMIBEAT பதிவிட்ட பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்டை தயாரிப்பாளர் போனி கபூர் ரீட்வீட் செய்துள்ளார்.
வலிமை படத்தின் அதிகாரப்பூர்வமான வசூல் குறித்து இதுவரை தயாரிப்பாளர் போனி கபூர் அறிவிக்காத நிலையில், நம்ம FILMIBEAT-ன் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்டை அவர் ரீட்வீட் செய்து இதுதான் உண்மையான வசூல் என்பதை உறுதி செய்துள்ளார்.
உலகம் முழுவதும் 75 கோடி வரை இந்த படம் முதல் நாளில் வசூல் செய்திருக்கும் என பேச்சுக்கள் அடிபட்டு வரும் நிலையில், 45 முதல் 50 கோடி வரை தான் இந்த படம் வசூலித்துள்ளது என்பது தெளிவாகி உள்ளது.

முதலிடம்
அஜித் நடிப்பில் வினோத் இயக்கத்தில் பிப்ரவரி 24ம் தேதி விடுமுறை கொண்டாட்டம் இல்லாத நாளில் வெளியான வலிமை திரைப்படம் அண்ணாத்த, மாஸ்டர், சர்கார் உள்ளிட்ட பல முந்தைய அதிக ஓப்பனிங் செய்த படங்களின் வசூல் சாதனையை தமிழ்நாடு அளவில் முறியடித்து முதலிடத்தை பிடித்துள்ளது. இனி இந்த பாக்ஸ் ஆபிஸை பீட் செய்யுமா பீஸ்ட் என்பதை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

வசூல் வேட்டை
முதல் நாளில் தமிழ் நாட்டில் மட்டும் 36.17 கோடி ரூபாயை வசூல் செய்துள்ளது. சென்னையில் அதிகபட்சமாக 1.82 கோடி ரூபாயை வசூல் செய்துள்ளது வலிமை திரைப்படம். தமிழ் சினிமாவில் இதுவரை வெளியான படங்களின் முதல் நாள் வசூலை பின்னுக்குத் தள்ளியுள்ளது வலிமை திரைப்படம். இப்படியொரு ரெக்கார்ட் பிரேக்கிங் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது பூர்த்தியாகி உள்ளது.

மொத்த வசூல்
வலிமை திரைப்படம் தமிழ்நாட்டில் நல்ல வசூலை குவித்த நிலையில், மற்ற இடங்களில் எதிர்பார்த்ததை விட அதிக வசூலை இந்த படம் ஈட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மொத்தமாக உலகம் முழுவதும் இந்த படம் 45 முதல் 50 கோடி ரூபாய் வரை முதல் நாள் வசூலாக வந்துள்ளது என்பது தற்போது உறுதியாகி உள்ளது.

உறுதி செய்த போனி கபூர்
FILMIBEAT வெளியிட்ட இந்த பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்டை வலிமை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூரே தனது ட்விட்டர் பக்கத்தில் ரீட்வீட் செய்து இதுதான் உண்மையான வசூல் நிலவரம் என்பதை உறுதி செய்துள்ளார். சிலர் இந்த படம் உலகளவில் 75 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்திருப்பதாகவும் தகவல்களை வெளியிட்டு வரும் நிலையில், மொத்தமாக இதுதான் முதல் நாள் நிலவரம் என்பது தெளிவாகி உள்ளது.
Recommended Video

இரண்டாம் நாள் எப்படி இருக்கும்
முதல் வாரத்தில் நிச்சயம் வலிமை படத்தின் World Wide Box Office வசூல் 100 கோடியை எளிதாக கடந்து விடும் என தெரிகிறது. வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு உள்ளிட்ட நாட்களிலும் தமிழ்நாடு திரையரங்குகளில் இதே போல 30 கோடிக்கும் அதிகமான வசூல் வேட்டை தொடர்ந்தால், வலிமை மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் வசூல் சாதனை படைத்த படமாக மாறிவிடும்.


Click it and Unblock the Notifications











