விடிய விடிய குழந்தை மாதிரி அழுதார் போனி: பிரபல நடிகர் பேட்டி
Recommended Video

துபாய்: தனது மனைவி இறந்ததும் போனி கபூர் குழந்தையை போன்று அழுததாக நடிகர் அத்னான் சித்திக்கி தெரிவித்துள்ளார்.
ஸ்ரீதேவி கடைசியாக நடித்த மாம் படத்தில் அவரின் கணவராக நடித்தவர் பாகிஸ்தானை சேர்ந்த அத்னன் சித்திக்கி. ஸ்ரீதேவியை போன்றே மோஹித் மர்வாவின் திருமணத்தில் கலந்து கொள்ள துபாய் சென்றார் அத்னான்.
இது குறித்து அத்னான் கூறியிருப்பதாவது,

ஸ்ரீதேவி
ஸ்ரீதேவி இறந்தபோது நான் துபாயில் இருந்தேன். ஸ்ரீதேவி இறந்துவிட்டாரா என்று கேட்டு பத்திரிகையாளர் ஒருவர் எனக்கு சனிக்கிழமை இரவு 11 மணிக்கு போன் செய்தார்.

விசாரணை
அந்த பத்திரிகையாளர் போன் செய்த பிறகு நான் ஸ்ரீதேவி தங்கியிருந்த ஹோட்டலுக்கு விரைந்து சென்றேன். அப்போது துபாய் அதிகாரிகள் விசாரணை நடத்திக் கொண்டிருந்ததால் நான் லாபியில் காத்திருந்தேன்.

அழுகை
ஒரு மணிநேரம் கழித்து போனி கபூரை சந்தித்தேன். அவர் ஒரு குழந்தையை போன்று அழுது கொண்டிருந்தார். அவருக்கு ஆறுதல் சொல்லவே முடியவில்லை. அந்த அளவுக்கு அழுதார்.

காலை
காலை 5 மணி வரை நான் போனி கபூருடன் தான் இருந்தேன். அவர் ஓய்வு எடுக்க வேண்டும் என்பதால் அதன் பிறகு நான் கிளம்பிச் சென்றேன். ஸ்ரீதேவியுடன் நடித்ததில் பெருமையாக உள்ளது.

திருமணம்
நான்கு நாட்களுக்கு முன்பு தான் மோஹித் மர்வாவின் திருமண நிகழ்ச்சியில் ஸ்ரீதேவியை பார்த்தேன். நான்கு நாட்களில் அவர் இறந்துவிட்டார் என்பதை நம்பவே முடியவில்லை என்றார் அத்னான் சித்திக்கி.


Click it and Unblock the Notifications











