ஸ்ரீதேவிதான் அதை செய்தார்.. ரொம்பவே தெளிவானவர்..மனைவி பற்றி போனி கபூர் உருக்கம்

சென்னை: இந்திய அளவில் பிரபலமான நடிகை ஸ்ரீதேவி. தமிழ் மட்டுமின்றி ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து தனக்கென தனி சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியவர். அவர் போனி கபூரை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு குஷி கபூர், ஜான்வி கபூர் என்ற இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். அவர்களில் ஜான்வி கபூரும் பிரபலமான நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார். இந்தச் சூழலில் ஸ்ரீதேவி குறித்து அவரது கணவர் போனி கபூர் உருக்கமாக பேசியிருக்கிறார்.

தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்தவர் ஸ்ரீதேவி. குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்த அவர் பிறகு ஹீரோயினாக அறிமுகமானார். ரஜினிகாந்த், கமல் ஹாசன் உள்ளிட்டோருடன் ஜோடியாக நடித்தவர் தனது திறமையால் ஏராளமான ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்தார். அவர் நடித்த படங்கள் அனைத்தும் வரிசையாக ஹிட்டடித்துக்கொண்டே இருந்தன. இதன் காரணமாக தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் தனது தடத்தை ஆழமாக பதித்தார்.

sridevi boney kapoor

ஹிந்தியில் பயங்கர பிஸி: ஹிந்தியிலும் அவர் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்துக்கொண்டிருந்ததால் அவருக்கு அங்கும் வாய்ப்புகள் குவிந்தன. ஒருகட்டத்தில் அங்கு அவர் தவிர்க்க முடியாத ஹீரோயினாக வலம் வர ஆரம்பித்தார். இதன் காரணமாக தமிழை மொத்தமாக ஓரங்கட்டிய அவர் பாலிவுட்டிலேயே செட்டில் ஆனார். அப்போதுதான் போனி கபூரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் என்ற இரண்டு மகள்கள் இருக்கிறார்கள்.

உயிரிழப்பு: அவர்களில் ஜான்வி கபூர் இப்போது பிஸியான நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார். இதற்கிடையே தமிழில் ஸ்ரீதேவி கடைசியாக புலி படத்தில் நடித்தார். சூழல் இப்படி இருக்க கடந்த 2018ஆம் ஆண்டு தனது குடும்ப நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக துபாய் சென்ற அவர்; அங்கிருக்கும் நட்சத்திர ஹோட்டலில் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு மட்டுமில்லாமல்; சந்தேகத்தையும் கிளப்பியது. ஆனால் அவரது உயிரிழப்பில் எந்தவிதமான மர்மமும் இல்லை என்று போனி கபூர் தொடர்ந்து கூறிவருவது குறிப்பிடத்தக்கது.

போனி கபூர் பேட்டி: இந்நிலையில் போனி கபூர் தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ஸ்ரீதேவி குறித்து பேசியிருக்கிறார். அவர் பேசுகையில், "எனக்கு உடல் எடையை குறைக்க வேண்டும் என்ற சிந்தனைகளை எனது மனைவி ஸ்ரீதேவிதான் என்னிடம் விதைத்தார். எடையை குறைக்கும் முயற்சியில் அவர் எப்போதும் எனக்கு ஊக்கம் கொடுத்துக்கொண்டே இருந்தார். அதன் காரணமாக அவரும் எப்போதும் சுகாதாரத்துடன் இருப்பார். நானும், அவரும் எப்போதும் நடை பயிற்சி செல்வது வழக்கம். ஜிம்முக்கும் அவருடன் சென்றிருக்கிறேன்.

தெளிவாக இருப்பவர்: ஸ்ரீதேவி எப்போது என்ன சாப்பிட வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தவர். அதன்படி நானும் அதை செய்ய முயற்சித்தேன். முழுவதுமாக செய்ய முடியாவிட்டாலும் முடிந்தவரைக்கும் அதை நான் ஃபாலோ செய்தேன். ஸ்ரீதேவி இன்னும் என்னை சுற்றி இருப்பதாகத்தான் நான் உணர்கிறேன். உடல் எடையை குறைக்க வேண்டும் என்று இன்னமும் என்னை அவர் ஊக்குவித்துக்கொண்டிருக்கிறார். உடல் எடை குறையும் என்று சொல்லிக்கொண்டுதான் இருக்கிறார்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X