அஜீத் ரசிகர்களே.. ஒரே ஒரு சீன்.. கொஞ்சம் பொறுங்க.. போனி கபூர் சூப்பர் நியூஸ்!

சென்னை : வினோத் இயக்கிய நேர் கொண்ட பார்வையில் நடித்த அஜித், அதை முடித்த கையோடு வினோத் இயக்கும் அடுத்த படமான தல 60 படத்தில் நடித்து வருகிறார். போனி கபூரின் பேவியூ புரோஜெக்ட்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு வலிமை என பெயரிடப்பட்டது.

ஹிமா குரேஷி, கார்த்திகேயா, யோகி பாபு நடிக்கும் வலிமை படத்தின் பணிகள் இறுதி கட்டத்தை நெருங்கி விட்டதாக கூறுகிறார்கள். ஆனால் படப்பிடிப்பு துவங்கி ஓராண்டுக்கு மேல் ஆகியும் இதுவரை அதிகாரப்பூர்வமாக ஒரு அப்டேட் கூட வெளியிடப்படவில்லை.

 ரகசியம் காக்கும் படக்குழு

ரகசியம் காக்கும் படக்குழு

இருப்பினும் அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் இடை விடாது வலிமை அப்டேட் பற்றி கேட்டுக் கொண்டே உள்ளனர். சமீபத்தில் வலிமை படத்தின் போட்டோ ஒன்று இணையத்தில் கசிந்தது. அது பற்றியும் படக்குழு இதுவரை வாய்திறக்கவில்லை.

போனி கபூர் சொன்ன சூப்பர் தகவல்

போனி கபூர் சொன்ன சூப்பர் தகவல்

இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் வலிமை படத்தின் தயாரிப்பாளரான போனி கபூர் கூறுகையில், தல அஜித் நடிக்கும் வலிமை படத்தின் மொத்த சூட்டிங்கும் 2021 பிப்ரவரி 15 ம் தேதியுடன் முடிய உள்ள தகவலை தெரிவித்துள்ளார்.

ஒரு சீன் தான் பாக்கி

ஒரு சீன் தான் பாக்கி

ஆனால் ஒரே ஒரு சண்டை காட்சி மட்டும் மீதம் இருப்பதாகவும், அதை வெளிநாட்டில் படமாக்க திட்டமிட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். அது முடிந்ததும் போஸ்ட் புரோடெக்ஷன் பணிகள் துவங்கும் என்றவர், இதுவரை படத்தின் ரிலீஸ் தேதி பற்றி எந்த முடிவும் எடுக்கவில்லை என்பதையும் தெரிவித்துள்ளார்.

 ரசிகர்கள் எதிர்பார்ப்பு

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

தயாரிப்பாளரான போனி கபூரே இப்படி கூறி விட்டதால் பிப்ரவரி 15 க்கு பிறகு வலிமை பற்றிய அடுத்தடுத்த அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கள் வெளியிடப்படலாம் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X