நேத்துனு பார்த்து ஸ்ரீதேவியின் கணவர் கொடுத்த சர்பிரைஸ் #sridevi
Recommended Video

துபாய்: ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் நேற்று அவருக்கு ஒரு சர்பிரைஸ் கொடுத்துள்ளார்.
நாத்தனார் மகன் மோஹித் மர்வாவின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள துபாய் சென்ற இடத்தில் நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
அவர் இறந்துவிட்டார் என்பதையே பலராலும் நம்ப முடியவில்லை.

துபாய்
திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஸ்ரீதேவி தனது கணவர் போனி கபூர் மற்றும் இளைய மகள் குஷியுடன் துபாய் சென்றார். திருமணம் முடிந்த உடன் போனி கபூர் மும்பை திரும்பிவிட்டார்.

குஷி
ஸ்ரீதேவியும், குஷியும் துபாயில் தங்கியிருந்தனர். இந்நிலையில் மனைவிக்கு சர்பிரைஸ் கொடுக்க போனி கபூர் நேற்று மும்பையில் இருந்து துபாய்க்கு சென்றுள்ளார்.

கணவர்
கணவர் தன் மீது உள்ள பாசத்தால் திரும்பி வந்ததை பார்த்து ஸ்ரீதேவி மகிழ்ச்சி அடைந்திருக்கிறார். போனி கபூர் ஆசை, ஆசையாய் துபாய் சென்றதை பார்த்த பாலிவுட் பிரபலங்கள் தற்போது அவருக்காக வருத்தப்படுகிறார்கள்.

சோகம்
ஸ்ரீதேவியின் உடலை இந்தியா கொண்டு வந்து நல்லடக்கம் செய்ய முயற்சி செய்து கொண்டிருக்கிறார் போனி கபூர். தனது இன்ப துன்பத்தில் பங்கேற்ற ஸ்ரீதேவி இறந்ததை அவரால் நம்ப முடியவில்லை.

காதல் திருமணம்
பாலிவுட்டில் நடிக்க சென்ற ஸ்ரீதேவி தயாரிப்பாளரான போனி கபூருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டபோது அவருடன் இருந்து பார்த்துக் கொண்டார். அப்போது தான் அவர்களுக்கு இடையே காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டனர்.


Click it and Unblock the Notifications











