twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கடும் மனஅழுத்தத்தில் போனி கபூர்...அப்படி என்ன தான் நடந்தது ?

    |

    மும்பை : சமீபத்தில் அரபிக் கடலில் உருவான டவ் தே புயல் மும்பைவாசிகளின் வாழ்க்கையை புரட்டி போட்டுள்ளது. நகரின் பல இடங்களில் பொருட்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன. குறிப்பாக மகாராஷ்டிரா, கேரளா, குஜராத் ஆகிய மாநிலங்களில் மிக கடுமையான தாக்கத்தை டவ் தே புயல் ஏற்படுத்தி உள்ளது.

    வாழ்க்கையில சின்ன சின்ன விஷயத்தகூட என்ஜாய் பண்றேன்... பிரபுதேவா சிலிர்ப்புவாழ்க்கையில சின்ன சின்ன விஷயத்தகூட என்ஜாய் பண்றேன்... பிரபுதேவா சிலிர்ப்பு

    நடிகர் அஜய் தேவ்கன் நடிக்கும் மைதான் படத்திற்காக போடப்பட்ட செட்டிலும் புயலால் கடுமையாக சேதமடைந்துள்ளது. இதனால் தயாரிப்பாளரான போனி கபூருக்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்த படத்தின் செட்டிற்காக மட்டுமே போனி கபூர் நிறைய தொகையை செலவிட்டுள்ளார்.

    2 முறை சேதமான செட்

    2 முறை சேதமான செட்

    இந்த படத்திற்காக முதல் முறை செட் போட்ட போது, முதல் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது. பல மாதங்களாக பயன்படுத்தப்படாததால் சேதமடைந்த இந்த செட் மீண்டும் அமைக்கப்பட்ட போது டவ் தே புயல் வந்து சூறையாடி விட்டு சென்றுள்ளது. இப்போது படத்தின் மீதமுள்ள காட்சிகளை எடுக்க வேண்டும் என்றால் மூன்றாவது முறையாக மீண்டும் செட்டை அமைக்க வேண்டும்.

    கடும் மனஅழுத்தத்தில் உள்ளேன்

    கடும் மனஅழுத்தத்தில் உள்ளேன்

    இது பற்றி போனி கபூர் கூறுகையில், அது பற்றி நான் நினைத்து பார்த்தால் கடுமையான மனஅழுத்தம், வேதனை, இழப்பு தான் ஏற்படுகிறது. இந்த பயங்கரத்தை எப்படி கடந்து வரப் போகிறேன் என்றே தெரியவில்லை. அதை பற்றி நினைத்தாலே நான் அழுது விடுகிறேன்.

    எப்படி கடக்க போகிறேன்

    எப்படி கடக்க போகிறேன்

    பட்ஜெட், செலவு அதிகரித்து கொண்டே போவதை நினைத்தால் எனக்கு மனஅழுத்தம் தான் ஏற்படுகிறது. அதை பற்றி நினைத்து பார்ப்பது கூட எனக்கு கஷ்டமாக உள்ளது. இதில் ஆறுதல் தரும் விஷயம் என்னவென்றால் யாருக்கும் இதனால் காயம் ஏதும் எற்படவில்லை.

    பிரம்மாண்ட செட்

    பிரம்மாண்ட செட்

    கடந்த ஆண்டு போடப்பட்ட செட்டை கலைத்து விட்டு, அதே பொருட்க்ளை பயன்படுத்தி மீண்டும் செட் அமைத்தோம். ஆனால் புயல் வந்து அனைத்தையும் நாசமாக்கி விட்டது. 8 மேக்அப் ரூம், 26 பாத்ரூம், பலவித செட்கள் அமைத்திருந்தோம். பெரும்பாலானவை போய் விட்டது. 8 கேமிரா செட்டப், வீரர்கள் விளையாடுகளை படம்பிடிக்க பிரத்யேக சாதனங்கள் பொருத்தி இருந்தோம் என்றார்.

    வலிமையையும் முடிக்க முடியவில்லை

    வலிமையையும் முடிக்க முடியவில்லை

    ஏற்கனவே தமிழில் அஜித் நடிக்கும் வலிமை படத்தை 2 ஆண்டுகள் ஆகியும் இதுவரை முடிக்க முடியாமல், பல சிக்கல்களை சந்தித்து வருகிறார் போனி கபூர். தமிழ் படம் தான் அப்படி என்றால், இந்தியில் அவர் தயாரிக்கும் படத்திற்கும் செலவு அதிகரித்துக் கொண்டே போகிறது.

    English summary
    Producer Boney Kapoor is taken aback cause of the loss.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X