வலிமை ஆக்ஷன் கலந்த குடும்ப படம்...புதிய தகவலை வெளியிட்ட போனி கபூர்
சென்னை : வலிமை படத்தின் இந்தியா சூட்டிங் அனைத்தும் முடிவடைந்து விட்டது. ஸ்பெயினில் எடுக்கப்பட உள்ள ஆக்ஷன் காட்சிகளுக்கு அனுமதி கிடைக்க படக்குழு காத்திருக்கிறது. இந்நிலையில் படம் பற்றி புதிய தகவலை படத்தின் தயாரிப்பாளரான போனி கபூர் வெளியிட்டுள்ளார்.
ஆன்லைன் போர்டலில் வலிமை குறித்து போனி கபூர் வெளியிட்ட தகவலில், வலிமை படம் அடுத்தடுத்த ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த வலுவான குடும்ப படம். வலிமை நிச்சயமாக அஜித் ரசிகர்களையும், அனைத்து தரப்பு சினிமா ரசிகர்களையும் கவரும் னெ தெரிவித்துள்ளார்.

இதற்கு முன் படத்தின் புரோமோஷன் பற்றி ட்விட்டரில் தெரிவித்த போனி கபூர், வலிமை படத்தின் புரோமோஷன் வேலைகள் அஜித்தின் 50 வது பிறந்தநாளில் துவங்கப்படும் என்றார். இதனால் ஃபஸ்டலுக் போஸ்டர் அல்லது மோஷன் போஸ்டர் அஜித்தின் பிறந்தநாளன்று வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரு சிறப்பான நாளில் படத்தின் ஃபஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட படக்குழு நினைத்திருப்பதால் அது அஜித் பிறந்தநாளாக இருக்கலாம் என கூறப்படுகிறது. கார்த்திகேயா, ஹூமா குரேஷி, சுமித்ரா உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











