Keerthy Suresh - என் மனைவிக்கு பிறகு கீர்த்தி சுரேஷ்தான் அப்படிப்பட்டவர் - போனி கபூர் ஓபன் டாக்

மும்பை: Keerthy Suresh (கீர்த்தி சுரேஷ்) நடிகை கீர்த்தி சுரேஷ் குறித்து தயாரிப்பாளர் போனிகபூர் பேசியிருப்பது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது.

ஏ.எல்.விஜய் இயக்கிய இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான் கீர்த்தி சுரேஷுக்கு ரஜினிமுருகன் திரைப்படம் பெரும் அடையாளத்தை பெற்றுக்கொடுத்தது. அழகும், திறமையு ஒரு சேர இருந்த கீர்த்தி சுரேஷுக்கு ரஜினிமுருகன் படத்துக்கு பிறகு வாய்புகள் குவிந்தன. மேலும் தமிழும் சரளமாக பேச தெரிந்த நடிகை என்பதால் அவரை புக் செய்வதற்கு பல இயக்குநர்கள் விரும்பினர். அந்தவகையில் விஜய்யுடன் பைரவா, விக்ரமுடம் சாமி 2 உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

தேசிய விருது: இப்படிப்பட்ட சூழலில் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறான மகாநடி படத்தில் நடித்தார் கீர்த்தி சுரேஷ். படத்தை பார்த்த அனைவருமே வாயடைத்துப்போனார்கள். அதற்கு காரணம் அந்தப் படத்தில் சாவித்திரியாகவே மாறிவிட்டார் கீர்த்தி சுரேஷ். படம் மெகா ஹிட்டாகி கீர்த்திக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது மட்டுமின்றி சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றுக்கொடுத்தது. இதன் காரணமாக இந்திய அளவில் பிரபலமடைந்தார்.

மாமன்னன் கீர்த்தி சுரேஷ்: தமிழில் அவர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் மாமன்னன் படத்தில் நடித்திருக்கிறார். படம் ஜூன் 29ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. மாரி செல்வராஜ் முக்கியமான இயக்குநர் என்பதால் மாமன்னன் படமும் கீர்த்தி சுரேஷுக்கு நல்ல பெயரை பெற்றுத்தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் ரகுதாத்தா என்ற படத்திலும் நடித்திருக்கிறார். அதற்கான ஷூட்டிங் சமீபத்தில்தான் முடிவடைந்தது.

Boney Kapoor Open talk about Actress Keerthy suresh

தொடரும் காதல் கிசுகிசு: இதற்கிடையே சமீபகாலமாக கீர்த்தி சுரேஷின் காதல் குறித்து பரவலாக பேசப்படுகிறது. அதாவது அவர் வளைகுடா நாட்டில் வசிக்கும் தனது சிறு வயது நண்பரான ஃபர்ஹான் என்பவரை காதலித்துவருவதாக தகவல் வெளியானது. மேலும் சமீபத்தில் ஃபர்ஹானுக்கு பிறந்தநாள் வாழ்த்தை கீர்த்தி சுரேஷ் சொல்லியதை தொடர்ந்து இருவரும் திருமணம் செய்துகொள்ளப்போவது உறுதி என கூறினர்.

தீவிரமாக மறுத்த கீர்த்தி சுரேஷ்: இந்தப் பேச்சு தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்க, சில நாள்களுக்கு முன்பு அதை தீவிரமாக மறுத்திருந்தார் கீர்த்தி சுரேஷ். நேற்று நடந்த மாமன்னன் ஆடியோ வெளியீட்டு விழாவில்கூட இதுகுறித்து பத்திரிகையாளர்கள் கேட்டதற்கும், எனக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறதிலேயே கவனமாக இருக்கீங்களே. திருமணம் செய்துகொண்டால் அதை நானே சொல்கிறேன் என கூறியிருந்தார்.

கீர்த்திதான் அழகு: இந்நிலையில் ஸ்ரீதேவியின் கணவரும், பிரபல தயாரிப்பாளருமான போனி கபூர் கீர்த்தி சுரேஷ் குறித்து பேசியிருப்பது இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. அவர் குறித்து பேசுகையில், "என் மனைவி ஸ்ரீதேவிக்கு பிறகு நான் பார்த்ததிலேயே கீர்த்தி சுரேஷ்தான் அழகு" என தெரிவித்தார். போனிகபூர் தமிழில் கடைசியாக அஜித்தை வைத்து துணிவு படத்தை தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X