7 படங்களை தயாரிக்கும் போனி கபூர்: அவ்வளவு பணம்...
Recommended Video

சென்னை: மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் 7 படங்களை தயாரிக்கிறார்.
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை படத்தை தயாரித்து வருகிறார். அஜித்தின் அடுத்த படத்தையும் போனி கபூர் தான் தயாரிக்கிறார்.

மேலும் அவர் அஜய் தேவ்கனை வைத்து இந்தியில் ஒரு படத்தை தயாரிக்கிறார். அந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடிக்க உள்ளார். இந்நிலையில் அவர் இந்தியில் சூப்பர் ஹிட்டான பதாய் ஹோ படத்தை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் ரீமேக் செய்யும் உரிமையை வாங்கியுள்ளார்.
முன்பு தென்னிந்திய படங்களை இந்தியில் ரீமேக் செய்தேன். தற்போது இந்தி படங்களை தென்னிந்திய மொழிகளில் ரீமேக் செய்கிறேன் என்று தெரிவித்துள்ளார் போனி கபூர்.
பதாய் ஹோ இந்தியில் வெற்றிகரமாக ஓடியது. முதலில் தமிழில் ரீமேக் செய்யப்படுமா அல்லது தெலுங்கிலா என்பது இன்னும் முடிவாகவில்லை என போனி கபூர் மேலும் தெரிவித்துள்ளார். போனி கபூர் அகல கால் வைக்கிறாரோ என்று அவரின் நலம் விரும்பிகள் கவலைப்படுகிறார்கள்.
ஸ்ரீதேவி இறந்தபோது அவர்களின் நிதி நிலைமை சரியில்லை என்று செய்திகள் வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











