twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    போனி கபூரின் கிரெடிட் கார்டை பயன்படுத்தி லட்சக்கணக்கில் மோசடி

    |

    மும்பை : பாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளரும், மறைந்த முன்னணி நடிகை ஸ்ரீதேவியின் கணவருமான போனி கபூரின் கிரெடிட் கார்டை பயன்படுத்தி, ரூ.4 லட்சம் வரை மோசடி நடத்தப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

    பாலிவுட்டில் பல ஹிட் படங்களை தயாரித்த போனி கபூர் கடந்த சில ஆண்டுகளாக தமிழிலும் பல படங்களை தொடர்ந்து தயாரித்து வருகிறார். தமிழில் அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களைத் தொடர்ந்து அஜித்தின் 61வது படமான ஏகே 61 படத்தை தயாரித்து வருகிறார். போனி கபூர் தயாரிப்பில் உதயநிதி ஸ்டாலின் நடித்த நெஞ்சுக்கு நீதி சமீபத்தில் தான் ரிலீசானது.

    இந்தியில் Jeet ki Zid, Mili, மைதான், தமிழில் வீட்டுல விஷேசம் உள்ளிட்ட பல படங்களை தயாரித்து வருகிறார். இன்னும் சில படங்களை தயாரிக்கவும் தயாராகி வருகிறார் போனி கபூர்.

     Boney Kapoors credit card misused, loses Rs.3.82 lakh in cyber fraud

    போனி கபூரின் ஐந்து வங்கி கணக்குகளில் இருந்து பிப்ரவரி 9 ம் தேதி ரூ.3.82 லட்சம் சட்ட விரோதமாக ஆன்லைனில் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது பற்றிய தகவல் கண்டுபிடிக்கப்பட்டதும் மும்பை - அம்போலி போலீசில் போனி கபூர் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. எப்படி போனி கபூரின் வங்கி கணக்கில் இருந்து பண பரிமாற்றம் செய்யப்பட்டது என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். வங்கியிலும் இது பற்றி விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

    போலீஸ் விசாரணையில் தான் யாரிடமும் நேரிலோ அல்லது போனிலோ கிரெடிட் கார்டு விபரங்களை பகிரவில்லை என போனி கபூர் தெரிவித்துள்ளார். இதனால் போனி கபூர் இதற்கு முன் போனி கபூர் கிரெடிட் கார்டை பயன்படுத்தி போது, அந்த விபரங்களை வைத்து தான் போனி கபூரின் கணக்கில் இருந்து பணம் பரிமாற்றம் செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். தொடர்ந்து இது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விஜய் படத்தை தயாரிக்க தயார்...ஆனால்....போனி கபூர் சொன்ன அந்த விஷயம் விஜய் படத்தை தயாரிக்க தயார்...ஆனால்....போனி கபூர் சொன்ன அந்த விஷயம்

    Read more about: boneykapoor ak61
    English summary
    Fraudulent transactions of around Rs.4 lakh took place by allegely using the credit card of Bollywood producer Boney Kapoor. Police case filed on this incident. Rs.3.82 lakh was transferred from Boney Kapoor's account in five fraudulent transactions on February 9th.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X