அஜீத், அஜய் தேவ்கான் - ஒரே நேரத்தில் களமிறங்கும் போனி கபூர்
சென்னை: ஒரே நேரத்தில் கோலிவுட், பாலிவுட் படங்களை தயாரிக்கிறார் போனி கபூர். நேர் கொண்ட பார்வை படத்தின் வெற்றியைத் தொடர்ந்து எச். வினோத் இயக்கத்தில் மீண்டும் ஒரு படத்தில் அஜித் நடிக்க உள்ளார். இந்த படம் அஜித்திற்கு 60 வது படம் ஆகும். இதையும் போனி கபூர் ஸீ ஸ்டுடியோஸ் உடன் சேர்ந்து தயாரிக்கவுள்ளார். இம்மாத இறுதியில் இந்த படத்திற்கு பூஜை போடப்போகிறார்கள். பாலிவுட்டில் அஜய் தேவ்கான் கீர்த்தி சுரேஷ் இணையும் மைதான் படத்தையும் தயாரிக்கிறார் போனி கபூர்.
அஜீத் நடித்த நேர்கொண்ட பார்வை படம் இம்மாதம் ரிலீஸ் ஆனது. கடந்த 2016 ஆம் ஆண்டு அமிதாப் பச்சன், டாப்ஸி ஆகியோர் நடிப்பில் வெளியான 'பிங்க்' படத்தின் அதிகாரபூர்வ ரீமேக் தான் இந்த படம். ஸீ ஸ்டுடியோஸ் உடன் சேர்ந்து போனி கபூர் இப்படத்தை தயாரித்துள்ளார். படம் பல விமர்சனங்களை பெற்றது. வெற்றியும் பெற்றது.
இதைத் தொடர்ந்து நடிகர் அஜித் குமார் நடிக்கும் தல 60வது படம் ஆகஸ்ட் மாத இறுதியில் தொடங்கும் என்று தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்துள்ளார்.

போனி கபூருடன் அஜீத்
'சதுரங்க வேட்டை', 'தீரன் அதிகாரம் ஒன்று' நேர்கொண்ட பார்வை ஆகிய படங்களை இயக்கிய எச்.வினோத்தான் இந்த படத்தையும் இயக்கப் போகிறார்.
இதையும் போனி கபூர் ஸீ ஸ்டுடியோஸ் உடன் சேர்ந்து தயாரிக்கவுள்ளார். இப்படம் இம்மாத இறுதியில் பூஜையுடன் தொடங்கும் என்று போனி கபூர் ட்விட்டரில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

தல 60
தல 60' என்று தற்காலிகமாக அழைக்கப்படும் இப்படம் பெரும் பொருட்ச்செலவில் உருவாகவுள்ளது. மேலும், இப்படத்தில் கார் சேஸ், பைக் சேஸ் என்று பெரும் ஆக்ஷன் காட்சிகள் உள்ளடங்கியுள்ளது என்று அவர் ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். இப்படத்திற்கு ஏ.ஆர் .ரஹ்மான் இசையமைக்க அதிக வாய்ப்பு உள்ளதாக தெரியவருகிறது. நேர்கொண்ட பார்வையில் நடிகை ஸ்ரத்தா நாத், அபிராமி, ஆண்ட்ரியா டைரங் ஆகியோர் நடித்திருந்தனர். தல 60 படத்தில் அஜீத்திற்கு யார் ஜோடியாக நடிப்பார் என்பது பற்றிய தகவல் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.
பாலிவுட்டில் மைதான்
இதனிடையே மைதான் என பெயரிடப்பட்டுள்ள பாலிவுட் படத்திற்கு பூஜை போட்டிருக்கிறார் போனி கபூர். அஜய் தேவ்கான் கீர்த்தி சுரேஷ் நடிக்கும் இந்த படம் பிரபல கால்பந்து வீரர் சயது அப்துல் ரஹிமின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை பிரபல இயக்குனர் அமித் சர்மா இயக்கவுள்ளார். இந்திய கால்பந்து விளையாட்டின் பொன்னான காலம் என்று குறிப்பிட்டு இந்த படத்தின் போஸ்டரை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் போனி கபூர்.
கீர்த்தி சுரேஷ்
இந்த படம் 1950 முதல் 1963 வரை இந்திய கால்பந்து அணியின் வரலாற்று பக்கங்களை நம்முன்னே கொண்டு வரப்போகிறது. மகாநடி படத்திற்காக தேசிய விருது பெற்ற மகிழ்ச்சியில் இருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் முதன்முறையாக பாலிவுட்டில் நடிக்கப் போகிறார் அதனை மகிழ்ச்சியோடு தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஒரே நேரத்தில் கோலிவுட், பாலிவுட் படங்களை தயாரிக்கிறார் போனி கபூர்.


Click it and Unblock the Notifications











