»   »  ஸ்ரீதேவியின் கணவர் ட்விட்டர் கணக்கை ஹேக் செய்து பேடிஎம்மில் பணம் போட சொன்ன விஷமி

ஸ்ரீதேவியின் கணவர் ட்விட்டர் கணக்கை ஹேக் செய்து பேடிஎம்மில் பணம் போட சொன்ன விஷமி

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூரின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டது.

நடிகை ஸ்ரீதேவியின் கணவரும், பாலிவுட் தயாரிப்பாளருமான போனி கபூரின் ட்விட்டர் கணக்கை யாரோ ஹேக் செய்துவிட்டனர். லக்னோவில் ஒரு ஷோ நடத்த நிதி தேவைப்படுவதால் தனது பேடிஎம் கணக்கிற்கு ரூ. 5 ஆயிரம் மற்றும் ரூ.10 ஆயிரம் பணம் அனுப்புமாறு அந்த ஹேக்கர் போனி கபூரின் ட்விட்டர் கணக்கு மூலம் பாலிவுட் பிரபலங்களுக்கு ட்வீட் செய்துள்ளார். மேலும் தனது செல்போன் எண்ணையும் அளித்துள்ளார் ஹேக்கர்.

Boney Kapoor's Twitter account hacked

படப்பிடிப்புக்காக வெளிநாட்டிற்கு சென்ற போனி கபூருக்கு தனது நண்பர்கள் சிலர் போன் செய்து கூறிய பிறகே ட்விட்டர் கணக்கு ஹேக்கானது தெரிய வந்துள்ளது.

இதையடுத்து போனி கபூர் இது குறித்து மும்பை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த ஹேக்கர் அளித்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டபோது அது சுவிட்ச்ஆப் செய்யப்பட்டிருந்தது.

அந்த செல்போன் எண் குஜராத்தில் பதிவு செய்யப்பட்டிருப்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

English summary
Bollywood producer Boney Kapoor's twitter account was hacked. Boney Kapoor has filed a complaint with the Mumbai police about the same.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil