ரசிகர்களின் கொண்டாட்டத்திற்காக உருவாக்கப்பட்ட படம் வலிமை... போனிகபூர் பளீச்

மும்பை : நடிகர் அஜித்குமார், ஹுமா குரேஷி, கார்த்திகேயா லீட் கதாபாத்திரங்களில் நடித்து வரும் 24ம் தேதி வெளியாகவுள்ள படம் வலிமை.

படத்திற்கான பிரம்மாண்ட பிரமோஷன்களை படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் படம் குறித்து அவர் தற்போது தனது கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

வலிமை படம்

வலிமை படம்

நடிகர் அஜித்குமார், ஹுமா குரேஷி, கார்த்திகேயா உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரங்களில் நடித்து வரும் 24ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் வலிமை. இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளது. இந்தப் படம் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பிற்கும் உள்ளாகியுள்ளது.

தள்ளிப் போன ரிலீஸ்

தள்ளிப் போன ரிலீஸ்

கடந்த பொங்கல் ரிலீசாக வெளியாக இருந்த இந்தப் படம் கொரோனா பரவல் உள்ளிட்ட காரணங்களால் ரிலீஸ் தள்ளிப் போனது. படத்தை ஜீ ஸ்டூடியோஸ் மற்றும் போனிகபூர் இணைந்து தயாரித்துள்ள நிலையில், படத்திற்கான பிரமோஷனை மிகவும் அதிகமான அளவில் கொடுத்து வருகிறார் போனி கபூர்.

கொண்டாட அதிகமான காரணங்கள்

கொண்டாட அதிகமான காரணங்கள்

இந்தப் படத்தில் குடும்ப உறவுகளின் உணர்வுபூர்வமான தருணங்கள், சிறப்பான ஆக்ஷன் காட்சிகள் மற்றும் அஜித் உள்ளிட்டவர்களின் சிறப்பான நடிப்பு என கொண்டாடுவதற்கு அதிகமான காரணங்கள் இருப்பதாக போனி கபூர் தற்போது தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில் அஜித்துடன் பணிபுரிந்த அனுபவம் குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

அர்ப்பணிப்பான அஜித்

அர்ப்பணிப்பான அஜித்

மிகவும் அடக்கமான மற்றும் தொழில் மீது ஆர்வம் மற்றும் அர்ப்பணிப்பு கொண்டவர் அஜித் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். தயாரிப்பாளர்களால் அஜித் அதிகமாக விரும்பப்படுவதில் எந்த ஆச்சர்யமும் இல்லை என்றும் கூறியுள்ளார். அவர் இந்தப் படத்தில் அதிகமான ஒத்துழைப்பு கொடுத்து நடித்து கொடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

வினோத் குறித்து பாராட்டு

வினோத் குறித்து பாராட்டு

இதனிடையே படத்தின் இயக்குநர் எச் வினோத் குறித்தும் அவர் பாராட்டு தெரிவித்துள்ளார். ஒவ்வொரு காட்சியும் சிறப்பாக வருவதற்காக அவர் அதிகமாக மெனக்கெட்டதாகவும் தெரிவித்துள்ளார். படத்தை கொரோனா காலத்திலும் சிறப்பாக முடித்துக் கொடுக்க அவர் அதிகமான சிரத்தை எடுத்துக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

திரையரங்க அனுபவத்திற்கான படம்

திரையரங்க அனுபவத்திற்கான படம்

வலிமை படத்தை ஓடிடியில் வெளியிட பலர் அதிகமான தொகையுடன் தங்களை அணுகியதாகவும் ஆனால் அதை தான் முற்றிலும் தவிர்த்ததாகவும் தெரிவித்துள்ள போனி கபூர், ரசிகர்களின் கொண்டாட்டத்திற்குரிய பிரத்யேகமான படமாக வலிமை உள்ளதாகவும் அதனால்தான் ஓடிடி ரிலீசிற்கு தான் நோ சொன்னதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

திரையரங்குகளில் கொண்டாட வேண்டும்

திரையரங்குகளில் கொண்டாட வேண்டும்

ஓடிடி தளங்கள் திரைப்படங்களுக்கு ஒரு பரந்த சந்தையை ஏற்படுத்தியுள்ளதை மறுக்க முடியாது என்றும் ஆனால் வலிமை போன்ற திரைப்படம் திரையரங்குகளில் ரசிகர்கள் சென்று பார்க்கும் அனுபவத்திற்காகவே உருவாக்கப்பட்டது என்றும் ரசிகர்கள் இந்தப் படத்தை திரையரங்குகளில் சென்று பார்த்து கொண்டாட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அஜித்தின் பிரமாண்ட வெளியீடு

அஜித்தின் பிரமாண்ட வெளியீடு

இதனிடையே, வலிமை திரைப்படம் அஜித்தின் இந்திய அளவிலான, பிரமாண்ட வெளியீடுகளின் துவக்கமாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். வரும் 24ம் தேதி படம் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ள நிலையில், படத்தை நீண்ட நாட்களாக எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இன்னும் 4 நாட்களில் படம் ரிலீசாக உள்ள நிலையில், வலிமை திருவிழாவிற்கு அவர்கள் தயாராகி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X