25 மில்லியன் வ்யூஸ்...வேற மாரி சாதனை படைத்த வலிமை...பெருமையாக பகிர்ந்த போனி கபூர்

சென்னை : டைரக்டர் ஹச். வினோத் இயக்கத்தில் அஜித்தின் 60 வது படமாக உருவாகி வருகிறது வலிமை. இந்திய அளவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படமாகவும் மாறி உள்ளது வலிமை படம் தான். அந்த அளவிற்கு அப்டேட் கேட்டே படத்தை பாப்புலர் ஆக்கி விட்டனர் அஜித் ரசிகர்கள்.

அஜித் ரசிகர்கள் மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழ் சினிமாவே எதிர்பார்த்து காத்திருக்கும் படம் வலிமை என்றே சொல்லலாம். கொரோனாவால் மூடப்பட்ட தியேட்டர்கள் மீண்டும் திறக்கப்பட்ட பிறகு, அதிக அளவிலான ரசிகர்களை தியேட்டருக்கு வர வைக்க அஜித்தின் வலிமை படத்தால் தான் முடியும் என தியேட்டர் உரிமையாளர்கள் நம்புவதே இதற்கு காரணம்.

நாங்க வேற மாரி

நாங்க வேற மாரி

பிரம்மாண்ட ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாக்கப்பட்டு வரும் வலிமை படம் கடந்த 2 ஆண்டுகளாக எடுக்கப்பட்டு வருகிறது. ரசிகர்களின் நீண்ட கால காத்திருப்பிற்கு பிறகு ஜுலை மாதம் வலிமை படத்தின் ஃபஸ்ட்லுக் போஸ்டர், மோஷன் போஸ்டர் ஆகியன வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து படத்தின் ஃபஸ்ட் சிங்கிளாக, நாங்க வேற மாரி பாடல் வெளியிடப்பட்டது. இந்த பாடலை அஜித் ரசிகர்கள் வேற லெவலில் வைரலாக்கினர்.

25 மில்லியன் வ்யூ

25 மில்லியன் வ்யூ

இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளரான போனி கபூர், யூட்யூப்பில் நாங்க வேற மாரி பாடல் 25 மில்லியன் பார்வைகளை பெற்று, சாதனை படைத்துள்ளதை பெருமையுடன் பகிர்ந்துள்ளார். புதிய போஸ்டருடன், Unstoppable நாங்க வேற மாரி என கேப்ஷன் பதிவிட்டுள்ளார். இதை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ஏற்கனவே வலிமை படம், இந்திய அளவில் ஆன்லைன் டிக்கெட் புக்கிங், அதிகமானவர்கள் பார்த்த ஃபஸ்ட்லுக் போன்ற பல சாதனைகளை படைத்து விட்டது.

செகண்ட் சிங்கிளும் ரெடி

செகண்ட் சிங்கிளும் ரெடி

யுவன்சங்கர் ராஜா இசையமைத்த நாங்க வேற மாரி பாடலை, டைரக்டர் விக்னேஷ் சிவன் எழுதி உள்ளார். இது தான் இந்த படத்தின் ஓப்பனிங் பாடலாம். இரண்டாவது சிங்கிளும் தயாராகி விட்டதாகவும், விரைவில் இது வெளியிடப்பட உள்ளதாகவும் சமீபத்தில் டைரக்டர் வெங்கட் பிரபு தெரிவித்திருந்தார். இது எப்போது ரிலீசாகும் என அஜித் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

தீபாவளி ரிலீசா

தீபாவளி ரிலீசா

வலிமை படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் தான் ரஷ்யாவில் முடிவடைந்தது. படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது. இந்த ஆண்டு தீபாவளிக்கு வலிமை படம் ரிலீஸ் செய்யப்பட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. வலிமை படத்தில் அஜித், ஹுமா குரேஷி, கார்த்திகேயா, பானி, சுமித்ரா, யோகிபாபு, ராஜ் அய்யப்பா, புகழ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

ரிலீஸ் தேதி சொல்லுங்க

ரிலீஸ் தேதி சொல்லுங்க

போனி கபூரின் இந்த ட்விட்டர் பதிவை ஏராளமானோர் லைக் செய்துள்ளனர். இருந்தாலும் அஜித் ரசிகர்கள் பலர், ரிலீஸ் தேதி எப்போ கன்ஃபார்ம் பண்ணுவீங்க, அடுத்த அப்டேட் எப்போ, செகண்ட் சிங்கிள் எப்போ என பல விதமாக கேள்வி கேட்டு கமெண்ட் பகுதியை நிரப்பி வருகின்றனர். இன்னும் சிலர் வலிமை படம் கிறிஸ்துமஸ் பண்டிகைக்க தான் ரிலீஸ் செய்யப்படும் என கூறுகின்றனர். எப்போது படத்தை ரிலீஸ் செய்தால் வரவேற்பு இருக்கும், வசூல் பாதிக்காது என்று வேறு பலர் கருத்து கூறி வருகின்றனர். இருப்பினும் பெரும்பாலானவர்கள் ரிலீஸ் தேதி கேட்டே கமெண்ட் செய்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X