twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    7 நிலை காதலை சொல்லும் ரொமான்டிக் கதை.. எகிப்து படத்தை இந்தி, தமிழில் ரீமேக் செய்கிறார் போனி கபூர்!

    By
    |

    சென்னை: பிரபல தயாரிப்பாளர் போனி கபூர். எகிப்து படம் ஒன்றை இந்தி மற்றும் தமிழ் மொழிகளில் ரீமேக் செய்ய இருக்கிறார்.

    பிரபல இந்தி திரைப்படத் தயாரிப்பாளர் போனி கபூர். நடிகர் அனில் கபூர் அண்ணனான இவர், நடிகை ஶ்ரீதேவியை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

    இவர்களுக்கு ஜான்வி, குஷி என்ற மகள்கள் உள்ளனர். நடிகை ஶ்ரீதேவி கடந்த 2018 ஆம் ஆண்டு துபாயில் நடந்த திருமண விழாவில் கலந்துகொள்ள சென்றபோது மரணமடைந்தார்.

    நேர்கொண்ட பார்வை

    நேர்கொண்ட பார்வை

    தனது ஜீ ஸ்டூடியோஸ் சார்பில் இந்தியில் ஏராளமான படங்களை தயாரித்துள்ள போனி கபூர், பிங்க் படத்தின் ரீமேக் மூலம் தென்னிந்திய சினிமாவுக்கு வந்தார். இந்தப் படத்தை தமிழில் அஜித் நடிப்பில் நேர்கொண்ட பார்வை என ரீமேக் செய்தார். இதை ஹெச். வினோத் இயக்கினார். இதில் ஸ்ரத்தா ஶ்ரீநாத், ஆண்ட்ரியா தரியங், வித்யா பாலன், ரங்கராஜ் பாண்டே உட்பட பலர் நடித்திருந்தனர். இந்தப் படம் ஹிட்டானது.

    அஜித்தின் வலிமை

    அஜித்தின் வலிமை

    இதை அடுத்து அஜித் நடிக்கும் வலிமை படத்தை தயாரித்து வருகிறார் போனிகபூர். இதையும் ஹெச். வினோத் இயக்குகிறார். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். இதில் போலீஸ் அதிகாரியாக அஜித்குமார் நடிக்கிறார். இதற்கிடையே, பிங்க் படத்தின் தெலுங்கு ரீமேக்கையும் தயாரித்துவருகிறார் போனி கபூர். தெலுங்கில் பவன் கல்யாண் நடித்துவருகிறார்.

    பதாய் ஹோ ரீமேக்

    பதாய் ஹோ ரீமேக்

    இதையடுத்து இந்தியில் வெளியாகி ஹிட்டான, பதாய் ஹோ படத்தின் தமிழ், தெலுங்கு ரீமேக்கையும் போனி கபூர் தயாரிக்க இருக்கிறார். அமித் சர்மா இயக்கி இருந்த இந்தப் படத்தில் அயுஷ்மன் குரானா, சான்யா மல்ஹோத்ரா, நீனா குப்தா, கஜ்ராஜ் ராவ் உட்பட பலர் நடித்திருந்தனர். இதன் தமிழ் ரீமேக்கில் நடிப்பவர்கள் அறிவிக்கப்படவில்லை.

    ஏழு நிலை காதல்

    ஏழு நிலை காதல்

    இதையடுத்து எகிப்தில் மெகா வெற்றிபெற்ற ரொமான்டிக் படமான, 'ஹெப்டா- த லாஸ்ட் லெக்சர் (Hepta - The Last Lecture)' என்ற படத்தின் ரீமேக் உரிமையை போனிகபூர் வாங்கியுள்ளார். காதலின் ஏழு நிலைகளை பேசும் இந்த படம் எந்த மொழிக்கும் பொருந்தக் கூடியது. இதை இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் ரீமேக் செய்ய இருக்கிறார் போனிகபூர். முகமது சதக் என்பவரின் நாவலை மையமாக கொண்டு உருவான படம் இது.

    தொடக்கம் மட்டுமே

    தொடக்கம் மட்டுமே

    இதுபற்றி போனிகபூர் கூறும்போது, 'எகிப்திய சினிமாவுடன் இணைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இரு நாடுகளும் கலாசாரம், கலை மற்றும் கட்டிட கலைகளில் பழங்காலத்தில் இருந்தே ஒன்றையொன்று பாதித்து வருகின்றன. இது தொடக்கம் மட்டுமே. இனி இந்திய, எகிப்திய படங்கள் அந்தந்த மொழிகளில் ரீமேக் செய்யப்படுவதை அதிகம் பார்க்க முடியும் என்று நம்புகிறேன்' என்று தெரிவித்துள்ளார்.

    English summary
    Boney Kapoor will be producing a remake of Egyptian movie 'Hepta - The Last Lecture' in Hindi, Tamil and several other languages.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X