ப்ரியாமணியை தகாத முறையில் தொட்டாரா போனி கபூர்?.. வெடித்த சர்ச்சை.. கிழிக்கும் ரசிகர்கள்
சென்னை: நடிகை பிரியாமணி கோலிவுட் மற்றும் டோலிவுட்டில் பிஸியான நடிகையாக வலம் வந்தவர். தேசிய விருது வென்ற நடிகையான அவர் திருமணத்துக்கு பின்பு சில காலம் நடிக்காமல் இருந்தார். அதனையடுத்து தொடர்ந்து நடிக்க ஆரம்பித்த அவர் கடைசியாக மலையாளத்தில் வெளியான நேரு படத்தில் வழக்கறிஞர் கதாபாத்திரம் ஏற்றிருந்தார். அடுத்ததாக அவரது நடிப்பில் மைடான் திரைப்படம் வெளியாகவிருக்கிறது. இதன் ப்ரீ ரிலீஸ் ஈவெண்ட் நிகழ்ச்சி மும்பையில் நடைபெற்றது
பாரதிராஜா இயக்கிய கண்களால் கைது செய் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் பிரியாமணி. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்த அந்தப் படம் தோல்வி அடைந்தாலும் பிரியாமணிக்கு நல்ல அறிமுகமும், பெயரும் கிடைத்தன. அதனையடுத்து பாலுமகேந்திரா இயக்கத்தில் அது ஒரு கனா காலம் படத்தில் நடித்து கவனம் ஈர்த்தார். தனது கரியரின் ஆரம்பத்திலேயே பாரதிராஜா, பாலுமகேந்திரா என இரண்டு பெரும் ஆளுமைகளின் இயக்கத்தில் நடித்ததால் திரையுலகில் வெகுவாக கவனம் ஈர்த்தார் ப்ரியாமணி.

தேசிய விருது: இப்படிப்பட்ட சூழலில் அமீர் இயக்கத்தில் உருவான பருத்திவீரன் படத்தில் நடித்தார். முத்தழகு என்ற கதாபாத்திரத்தில் அட்டகாசமாக நடித்திருந்தார். கார்த்தியிடம் காதலில் கசிந்துருகுவதும், காதல் விவகாரம் வீட்டில் தெரிந்த பிறகு யாருக்கும் அஞ்சாமல் இருப்பதும் என ஒவ்வொரு காட்சியிலும் நடிப்பு ராட்சசியாக மிரட்டியிருந்தார். குறிப்பாக அந்த க்ளைமேக்ஸ் காட்சியில் அனைவரையும் கலங்க வைத்தார். இதன் காரணமாக அவருக்கு தேசிய விருது கிடைத்தது.
குறைந்த வாய்ப்புகள்: பருத்திவீரனில் தேசிய விருது கிடைத்ததால் கண்டிப்பாக அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவியும் என்று எதிர்பார்த்திருந்தார். ஆனால் அதற்கு நேர் மாறாக ஒன்றிரண்டு படங்களின் வாய்ப்பே அமைந்தது. அதேபோல் தெலுங்கிலும் சில படங்களில் நடித்தார். ஒருகட்டத்தில் பட வாய்ப்புகள் சுத்தமாக இல்லாமல் போக முஸ்தஃப் என்பவரை கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டு செட்டிலாகிவிட்டார்.
நேரு: திருமணத்திற்கு பிறகும் நடிப்பதில் ஆர்வம் காட்டி வந்த அவர் கடைசியாக ஜவான் மற்றும் நேரு உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். நேரு படத்தில் பெண் வழக்கறிஞர் கதாபாத்திரத்தையும், ஜவான் படத்தில் ஷாருக்கான் டீமில் இருக்கும் ஒரு ஆக்ஷன் வுமன் கதாபாத்திரத்தையும் ஏற்று கலக்கியிருந்தார். அடுத்ததாக அவர் மைடான் திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.
மைடான் திரைப்படம்: மைடான் திரைப்படத்தில் அஜய் தேவ்கன் ஹீரோவாக நடித்திருக்கிறார். அமித் ஷர்மா இயக்க; போனி கபூர் ஜீ ஸ்டூடியோஸ் சார்பாக படத்தை தயாரித்திருக்கிறார். இந்தியாவைச் சேர்ந்த கால்பந்து பயிற்சியாளர் சையத் அப்துல் ரஹீமின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கிறது. ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.
வெடித்த சர்ச்சை: இந்நிலையில் நாளை படம் ரிலீஸாகவிருப்பதால் ப்ரீ ரிலீஸ் ஈவெண்ட் மும்பையில் நடைபெற்றது. அதில் போனி கபூர், ப்ரியாமணி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர். ப்ரியாமணி கறுப்பு நிற சேலையில் நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். அப்போது பத்திரிகையாளர்களுக்கு போஸ் கொடுக்கும்போது போனி கபூர் ப்ரியாமணியை தகாத முறையில் தொட்டார் என்று நெட்டிசன்கள் கிழித்து எடுத்துவருகின்றனர். மேலும் அவர் அப்படி தொட்டதை ப்ரியாமணி கொஞ்சமும் ரசிக்கவில்லை என்பது வீடியோவில் உறுதியாவதாகவும் ரசிகர்கள் கூறுகின்றனர். முன்னதாக இப்படத்தில் முதலில் கீர்த்தி சுரேஷ் நடிக்கவிருந்ததும்; சில காரணங்களால் அவருக்கு பதில் ப்ரியாமணியை கமிட் செய்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











