twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நெகட்டிவ் ரோலில் அஜித்.. AK61 ஆரம்பம் என ட்வீட் போட்ட போனி கபூர்.. வலிமை புரமோஷன் எங்கப்பா?

    |

    சென்னை: அடுத்த வாரம் வலிமை திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில், அதன் புரமோஷன் பணிகளில் தீவிரம் காட்டாமல் அடுத்த படத்தின் உருவாக்கத்தில் களமிறங்கி உள்ளார் தயாரிப்பாளர் போனி கபூர்.

    வலிமை படம் எப்படி வந்தாலும் அது ஹிட் தான் அடிக்கப் போகிறது என்பதால், அதன் புரமோஷனை ஒதுக்கி வைத்து விட்டு தயாரிப்பாளர் போனி கபூர், இயக்குநர் எச் வினோத் மற்றும் நடிகர் அஜித் குமார் ஏகே 61 படத்தின் ஆரம்ப பணிகளை மேற்கொள்ள தொடங்கி உள்ளனர்.

    நடிகர் அஜித்தின் ஏகே 61 லுக் புகைப்படம் இணையத்தில் கசிந்த நிலையில், அதன் டார்க் ஷேர் போஸ்டரை தற்போது போனி கபூர் வெளியிட்டுள்ளார்.

    அடேங்கப்பா..ரிலீசுக்கு முன்பே 300 கோடி ப்ளஸ் லாபமா..மாஸ் காட்டும் வலிமை...ஆச்சரியத்தில் திரையுலகம் அடேங்கப்பா..ரிலீசுக்கு முன்பே 300 கோடி ப்ளஸ் லாபமா..மாஸ் காட்டும் வலிமை...ஆச்சரியத்தில் திரையுலகம்

    ஹாட்ரிக் கூட்டணி

    ஹாட்ரிக் கூட்டணி

    நேர்கொண்ட பார்வை மூலம் இணைந்த தயாரிப்பாளர் போனி கபூர், இயக்குநர் எச் வினோத் மற்றும் நடிகர் அஜித் குமார் கூட்டணி வலிமை படத்தைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஏகே 61 படத்திற்காக இணைந்துள்ளது. அந்த படத்தின் ஆரம்ப பணிகள் ஆரம்பித்து விட்டதாக தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்துள்ளார்.

    நெகட்டிவ் ரோல்

    நெகட்டிவ் ரோல்

    பிங்க் படத்தின் ரீமேக்கை தயாரிப்பாளர் போனி கபூருக்காக இயக்குநர் எச் வினோத் இயக்கிய நிலையில், ரசிகர்களுக்காக வலிமை படத்தை உருவாக்கி உள்ளார். இந்நிலையில், தனக்கே உரிய ஸ்டைலான டார்க் ஷேட் படம் ஒன்றை நடிகர் அஜித் குமாருக்காக உருவாக்க காத்திருக்கிறார் இயக்குநர் எச். வினோத்.

    புதிய லுக்

    புதிய லுக்

    காதில் கடுக்கன் உடன் நடிகர் அஜித் குமார் சமீபத்தில் வெளியே தென்பட்ட ஒரு வீடியோ வைரலானதில் இருந்தே ஏகே 61 படத்தில் இந்த கெட்டப் உடன் தான் அஜித் தோன்ற உள்ளார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், இன்று நடிகர் அஜித் குமாரின் ஏகே 61 படத்தின் புதிய லுக் புகைப்படம் டிரெண்டானது. அதனை தொடர்ந்து அதன் டார்க் ஷேட் புகைப்படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் அதிகாரப்பூர்வமாக போட்டுள்ளார்.

    பிடித்து விட்டால்

    பிடித்து விட்டால்

    தனக்கு ஒரு இயக்குநர் செட் ஆகி விட்டால், அவரது உழைப்பு நடிகர் அஜித் குமாருக்கு பிடித்து விட்டால் தொடர்ந்து அவருடன் பணியாற்றும் பழக்கத்தை கொண்டுள்ளார். இயக்குநர் சிவாவுடன் தொடர்ந்து வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என 4 படங்களில் நடித்த நிலையில், இயக்குநர் வினொத் உடன் 3வது படத்தில் நடிக்க சம்மதித்துள்ளார் அஜித்.

    மங்காத்தாவை தூக்கி சாப்பிடும்

    மங்காத்தாவை தூக்கி சாப்பிடும்

    வாலி, வில்லன், வரலாறு, மங்காத்தா என ஏகப்பட்ட படங்களில் நடிகர் அஜித் நெகட்டிவ் ரோலில் நடித்துள்ளார். மங்காத்தா படத்தில் உச்சகட்டமாக கிரே ஷேடில் அஜித் நடித்திருப்பார். இந்நிலையில், இந்த படம் மங்காத்தாவையே தூக்கி சாப்பிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் படம் வெளியாகும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    Recommended Video

    Ajith Sir இதை சொல்லும்போது வெக்கமா வரும் !Valimai Villain First Exclusive Tamil Interview
    வலிமை புரமோஷன் எங்கப்பா?

    வலிமை புரமோஷன் எங்கப்பா?

    இன்னும் ஒரு வாரத்தில் வலிமை திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், ரசிகர்களை ஒட்டுமொத்தமாக அந்த படத்திற்காகவே ட்யூன் செய்வதை விட்டு அடுத்த படத்தின் மீது கவனம் செலுத்த தயாரிப்பாளர் போனி கபூர் முனைவது ஏன் என்கிற கேள்வியை அஜித் ரசிகர்களே கிளப்பி வருகின்றனர். வலிமை திருவிழா முடிந்த பின்னர் தான் ஏகே 61 பக்கம் திரும்புவோம் என்பதிலும் உறுதியாக உள்ளனர்.

    English summary
    Producer Boney Kapoor tweeted AK 61 Ajith’s new look in dark shade mode makes fans happy. But they requesting him to start Valimai promotion now.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X