நடிகையின் பின்னால் தட்டிய ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர்: வைரல் வீடியோ
மும்பை: தயாரிப்பாளர் போனி கபூர் நடிகை ஊர்வசி ரவ்தெலாவின் பின்புறத்தில் தட்டும் வீடியோ வெளியாகி பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
தயாரிப்பாளர் போனி கபூர், நடிகை ஊர்வசி ரவ்தெலா உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்கள் பலர் திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டனர்.
அந்த நிகழ்ச்சியின்போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை பார்த்துவிட்டு பலரும் போனி கபூரை விளாசியுள்ளனர்.
ஊர்வசி ரவ்தெலா
திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தபோது போனி கபூர் ஊர்வசியின் பின்னால் தட்டும் வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.
மகள்
மகன் அர்ஜுன் கபூர் வயதான நடிகையின் பின்னால் சென்றுள்ளார், அப்பா மகள் வயது பெண்ணுக்கு பின்னாலா என்று நெட்சன்கள் போனி கபூரை விளாசியுள்ளனர்.
விளாசல்
போனி தன் பின்னால் தட்டியதும் ஊர்வசியின் முகம் மாறிவிட்டது. போனி கபூர் இப்படியா சீப்பாக நடந்து கொள்வார் என்கிறார்கள் நெட்டிசன்கள்.
மோசம்
ச்சீ போனி கபூர் என்ன இப்படி செய்துவிட்டார். ஒரு சீனியர் இப்படியா நடந்து கொள்வது. சினிமா துறையில் இதுவும் சகஜமா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











