ஸ்ரீதேவியை வைத்து படம் எடுத்து கடன்காரரான போனி கபூர்: மன்னிப்பு கேட்ட இயக்குனர்
Recommended Video

மும்பை: ஸ்ரீதேவியை வைத்து படம் தயாரித்து கடன்காரராகியுள்ளார் அவரின் கணவர் போனி கபூர்.
ஸ்ரீதேவியுடன் நெருங்கிப் பழகும் ஆசையில் அவரையும், தன் தம்பி அனில் கபூரையும் வைத்து மிஸ்டர் இந்தியா படத்தை தயாரித்தார் போனி கபூர். அதன் பிறகு மீண்டும் அனில், ஸ்ரீதேவியை வைத்து ரூப் கி ராணி சோரோன் கா ராஜா படத்தை தயாரித்தார் போனி. படத்தை புதுமுகம் சதிஷ் கவுசிக் இயக்கினார்.
அந்த படம் வெளியாகி 25 ஆண்டுகள் ஆகியுள்ளது. இந்நிலையில் அதை நினைவுகூரும் விதமாக ட்வீட் போட்டுள்ளார் இயக்குனர் சதிஷ் கவுசிக்.

நஷ்டம்
1993ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16ம் தேதி வெளியான ரூப் கி ராணி சோரோன் கா ராஜா படம் ரூ. 9 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. ஆனால் படம் வெறும் ரூ. 2 கோடி வசூல் செய்ததால் தயாரிப்பாளரான போனி கபூர் கடன்காரராகி பெரும் அவதிப்பட்டார்.
25 ஆண்டுகள்
25 ஆண்டுகளுக்கு முன்பு பாக்ஸ் ஆபீஸில் தோற்ற படம். ஆனால் அது என் முதல் படம். எனக்கு பிரேக் கொடுத்து, ஆனால் ரிலீஸுக்கு பிறகு கடன்காரரான போனி கபூரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன் என்று இயக்குனர் சதிஷ் கவுசிக் ட்வீட்டியுள்ளார்.
ஸ்ரீதேவி
#RKRCKR படம் ரிலீஸாகி 25 ஆண்டுகளாகிவிட்டது என்பதை நம்ப முடியவில்லை. அந்த படத்தை எடுக்கும்போதும், அதன் பிறகும் சந்தித்த தடைகள் நினைவில் உள்ளது. ரூப் கி ராணியை தினமும் மிஸ் பண்ணுகிறோம் என்று நடிகர் அனில் கபூர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
நினைவுகள்
25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள ரூப் கி ராணி சோரோன் கா ராஜா படம் பற்றி நல்ல நினைவுகள் உள்ளன. இந்த படத்தில் பணியாற்றியதற்காக எப்பொழுதுமே பெருமைப்படுகிறேன் என்று நடிகர் அனுபம் கேர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











