டைட்டிலா... பர்ஸ்ட் லுக்கா... அஜித் பிறந்தநாளில் காத்திருக்கும் சூப்பர் விருந்து!

ஐதராபாத் : நடிகர் அஜித்தின் ஏகே61 படத்தின் சூட்டிங் நேற்றைய தினம் ஐதராபாத்தில் துவங்கியுள்ளது. இந்த சூட்டிங்கிற்காக ஐதராபாத்தில் பிரம்மாண்டமான அளவில் மவுண்ட் ரோட் செட் போடப்பட்டுள்ளது. நேற்றைய தினம் படத்தின் சூட்டிங் பூஜையுடன் துவங்கியுள்ளது.

ஏகே61 படம்

ஏகே61 படம்

நடிகர் அஜித் நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக ஹெச் வினோத் -போனி கபூர் கூட்டணியில் இணைந்துள்ளார். சமீபத்தில் வெளியான வலிமை படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், வசூலில் சிறப்பான சாதனையை புரிந்துள்ளது. 200 கோடி ரூபாயை படம் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

இந்நிலையில் ஏகே61 படத்திற்காக எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. வலிமை படம் அதிகமான சென்டிமெண்ட், அதிகமான பைக் சேசிங் காட்சிகளை கொண்டு வெளியானது. இந்நிலையில் ஏகே61 படத்தில் பேங்க் கொள்ளையை மையமாக கொண்டு கதைக்களத்தை ஹெச் வினோத் உருவாக்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ஏகே61 சூட்டிங் துவக்கம்

ஏகே61 சூட்டிங் துவக்கம்

படத்தின் சூட்டிங் நேற்றைய தினம் ஐதராபாத்தில் துவங்கியுள்ளது. முன்னதாக படத்தின் பூஜை போடப்பட்டு சூட்டிங் துவங்கப்பட்டுள்ளது. படத்திற்காக மவுண்ட் ரோட் செட் பிரம்மாண்டமான வகையில் போடப்பட்டுள்ளது. இதேபோல பேங்க் கொள்ளையை மையமாக கொண்டு படம் உருவாகவுள்ளதால் பேங்க் செட்டும் போடப்பட்டுள்ளது.

முன்னதாகவே ஐதராபாத் சென்ற அஜித்

முன்னதாகவே ஐதராபாத் சென்ற அஜித்

இந்நிலையில் இந்த சூட்டிங்கில் பங்கேற்பதற்காக நடிகர் அஜித் மூன்று நாட்களுக்கு முன்னதாகவே ஐதராபாத் சென்றுள்ளார். படத்தில் அவர் இரட்டை ரோல்களில் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. பேங்கில் நடைபெறும் கொள்ளையை அவர் எப்படி கையாள்கிறார் என்ற கதைக்களத்தில் படம் நகரும் என்று கூறப்பட்டுள்ளது.

ஏகே61 படத்தின் பர்ஸ்ட்லுக்

ஏகே61 படத்தின் பர்ஸ்ட்லுக்

இந்நிலையில் வரும் மே 1ம் தேதி அஜித்தின் பிறந்தநாளையொட்டி படத்தின் பர்ஸ்ட் லுக் அல்லது டைட்டிலை போனி கபூர் வெளியிடுவார் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கென அஜித் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். மேலும் படத்தில் ரகுல் பிரீத் சிங் அஜித்திற்கு ஜோடியாகியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X