ப்ரியா பிரகாஷ் வாரியர் படத்தை கைவிடச் செய்யாமல் ஓய மாட்டாராம் போனி கபூர்
மும்பை:
ஸ்ரீதேவி பங்களா படத்தை போனி கபூர் வெளிவர விடமாட்டார் என்று கூறப்படுகிறது.
கண்ணடித்து பிரபலமான ப்ரியா பிரகாஷ் வாரியர் நடிக்கும் படம் ஸ்ரீதேவி பங்களா. அந்த படத்தில் ஒரு நடிகையாக வருகிறார் ப்ரியா. இந்நிலையில் வெளியான டீஸரில் குளியல் தொட்டியில் நடிகையின் கால்கள் மட்டும் தெரிவது போன்ற காட்சி இருந்தது.
இது நடிகை ஸ்ரீதேவி குளியல் தொட்டியில் இறந்து கிடந்ததை நினைவூட்டுகிறது என்று கூறி அவரின் கணவரும், தயாரிப்பாளருமான போனி கபூர் கோபம் அடைந்தார்.

ஸ்ரீதேவி பங்களா
படத்திற்கு ஸ்ரீதேவி பங்களா என்று பெயர் வைத்து பாத்டப்பில் நடிகையின் கால்களை காட்டியது தங்களை வேதனைப்படுத்தியுள்ளது என்று கூறி போனி கபூர் அந்த படக்குழுவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

மனைவி
ஸ்ரீதேவி பங்களா படத்தை போனி கபூர் ரிலீஸ் செய்ய விட மாட்டார். தங்களின் படத்திற்கு சீப் விளம்பரம் தேட அவர்கள் ஸ்ரீதேவியின் பெயரை பயன்படுத்தியுள்ளனர். அவர்களை போனி கபூர் சும்மா விட மாட்டார் என்று அவருக்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்துள்ளார்.

விளக்கம்
ஸ்ரீதேவி பங்களா படத்திற்கும் நடிகை ஸ்ரீதேவிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று படத்தின் இயக்குனர் பிரசாந்த் போனி கபூருக்கு விளக்கம் அளித்துள்ளார். ஸ்ரீதேவி என்பது சாதாரண பெயர் என்று பிரசாந்த் தெரிவித்துள்ளார். ஆனால் பிரசாந்தின் விளக்கத்தை ஏற்க போனி கபூர் தயாராக இல்லை.

கபூர் குடும்பம்
தன் மனைவியை மோசமாக படத்தில் காட்டுவதை போனி ஒரு நாளும் ஏற்க மாட்டார். அந்த படத்தை கைவிடச் செய்யும் வரை அவருக்கு ஓய்வு என்பதே இல்லை என்று கபூர் குடும்பத்திற்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்துள்ளார். ஸ்ரீதேவி பங்களா குறித்து நிகழ்ச்சி ஒன்றில் ஜான்வி கபூரிடம் கேட்கப்பட்டது. ஆனால் அவர் அந்த கேள்விக்கு பதில் அளிக்கவில்லை.


Click it and Unblock the Notifications











